அராரி பிரதேசம்
![]()
அராரி பிரதேசம் (Harari Region) கிழக்கு ஆப்பிரிக்கா நாடானா எத்தியோப்பியாவின் வடகிழக்கில் அமைந்த மிகச்சிறிய பிரதேசம் ஆகும். இது எத்தியோப்பியான் 11 பிரதேசங்களில் ஒன்றாகும். இதன் தலைநகரம் அரார் நகரம் ஆகும். இப்பிரதேசத்தில் அராரி மொழி மற்றும் ஒரோமியோ மொழிகள் அதிகம் பேசப்படுகிறது. ரோமியா பிரதேசத்தால் சூழ்ந்தது அராரி பிரதேசம்.[4] அமைவிடம்அராரி பிரதேசம், ரோமியா பிரதேசத்தின் கிழக்கு அரார்கே மண்டலத்தால் சூழ்ந்த சிறு பகுதியாகும். மக்கள் தொகை பரம்பல்அராரி பிரதேசத்தின் இனக்குழுக்கள் ஒரோமோ இன மக்கள் (56.41%) அம்மாரா இன மக்கள் (22.77%) அராரி இன மக்கள் (8.65%) குராஜ் இன மக்கள் (4.34%) சோமாலி இன மக்கள் (3.87%) திக்ரே இன மக்கள் (1.53%) அர்கோப்பா இன மக்கள் (1.26%) ஏனைய (1.17%)
2007-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 311.25 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 46,169 குடியிருப்புகளும் கொண்ட அராரி பிரதேசத்தின் மக்கள் தொகை 1,83,415 ஆகும். அதில் ஆண்கள் 92,316 மற்றும் பெண்கள் 91,099 ஆக உள்ளனர். 54.18% மக்கள் நகர்புறங்களில் வாழ்கின்றனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 589.05 பேர் வீதம் வாழ்கின்றனர். இப்பிரதேசத்தில் ஒரோமோ மக்கள் 56.41%, அம்மாரா இன மக்கள் 22.77%, அராரி இன மக்கள் 8.65%, குராஜ் இன மக்கள் 4.34%, சோமாலி இன மக்கள் 3.87%, திக்ரே இன மக்கள் 1.53% மற்றும் அர்கோப்பா இன மக்கள் 1.26% வாழ்கின்றனர். இப்பிரதேசத்தில் ஒரோமோ மொழி 56.84%, அம்மாரா மொழி 27.53%, அராரி மொழி [7.33%, சோமாலி மொழி 3.70% மற்றும் குராஜ் மொழி 2.91% பேர் பேசுகின்றனர். சமயம்அராரி பிரதேசத்தில் சமயங்கள் (2007)[5] இசுலாமியர்கள் (69%) எத்தியோப்பியா பழமைவாத கிறித்துவர்கள் (27.1%) சீர்திருத்த கிறித்துவர்கள் (3.4%) தொல்குடி சமயத்தினர் (0.1%) கத்தோலிக்க கிறித்துவர்கள் (0.3%) Other (0.1%)
நிர்வாகம்![]() அராரி பிரதேசம் 9 மாவட்டங்களையும், 19 நகரங்களையும், 17 ஊரகப் பகுதிகளையும் கொண்டுள்ளது. கொண்டுள்ளது.
எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்
எத்தியோப்பிய நகரங்கள்இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia