அம்மாரா பிரதேசம்![]()
அம்மாரா பிரதேசம் (Amhara Region), கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்த ஒரு பிரதேசம் ஆகும். இதன் தலைநகரம் பாகிர் தார் நகரம் ஆகும். இதனருகே திக்ரே பிரதேசம் அமைந்துள்ளது. இது ஆப்பிரிக்க அம்மாரா இன பழங்குடி மக்களின் தாயகம் ஆகும். இப்பிரதேசத்தில் சிமியோன் மலைகள் அமைந்துள்ளது. மேலும் இப்பிரதேசத்தில் உள்ள தானா ஏரி, நைல் நதிக்கு நீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றாகும். இப்பிரதேசத்தில் சிமியோன் மலைகள் தேசியப் பூங்கா அமைந்துள்ளது. 1,54,709 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட அம்மார பிரதேசத்தின் மக்கள் தொகை 2,00,18,988 ஆக உள்ளது. இப்பிரதேசத்தில் அம்காரியம் உள்ளிட்ட அகாவ், வாக் ஹெம்ரா, அர்கோபா, பீட்டா இஸ்ரேல், குமுஸ் இஸ்ரேல், ஒரோமோ மொழிகள் பேசப்படுகிறது. அமைவிடம்எத்தியோப்பியா நாட்டின் மேற்கில் அமைந்த அம்மாரா பிரதேசத்தின் மேற்கிலும்,வடமேற்கிலும் தெற்கு சூடான் நாடும், வடக்கில் திக்ரே பிரதேசமும், கிழக்கில் அபார் பிரதேசமும், தெற்கில் ஒரோமியா பிரதேசமும், தென்மேற்கில் பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசமும் அமைந்துள்ளது. எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்
நகரங்கள்இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia