பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசம்
![]()
பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசம் (Benishangul-Gumuz), கிழக்கு ஆப்பிரிக்கா நாடான எத்தியோப்பியாவின் 11 பிர்தேசங்களில் ஒன்றாகும். இது எத்தியோப்பியாவின் வடமேற்கில், தெற்கு சூடான் நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இதனை தலைநகரம் அஸ்சோசா நகரம் ஆகும். நீல நைல் ஆறு பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசத்தையும், சூடான் நாட்டையும் பிரிக்கிறது. போக்குவரத்து வசதிகள் மற்றும் தொலைதொடர்பு வசதிகள் குறைபாட்டால் பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசம் பொருளாதார வளர்ச்சி அடையாமல் உள்ளது. 2012-ஆம் ஆண்டில் இப்பிரதேசத்தின் மெடெக்கெல் பிராந்தியத்தையும், அஸ்சோசா பிராந்தியத்தையும் இணைக்க சீனா நாடு ஒரு பாலம் அமைதுள்ளது. அமைவிடம்இதன் வடமேற்கில் சூடான் நாடும், தென்மேற்கில் தெற்கு சூடான் நாடும், வடக்கிலும், வடகிழக்கிலும் அம்மாரா பிரதேசம், கிழக்கிலும், தெற்கிலும் ஒரோமியா பிரதேசம் அமைந்துள்ளது. மக்கள் தொகை பரம்பல்2007-ஆம் ஆண்டின் மக்கள் தொகை அடிப்படையில், 49,289 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 174,445 குடியிருப்புகளும் கொண்ட பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகை 7,84,345 ஆகும். அதில் ஆண்கள் 3,98,655 மற்றும் பெண்கள் 3,85,690 ஆவர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 15.91 பேர் வீதம் வாழ்கின்றனர். இப்பிரதேசத்தின் அம்மாரா இன மக்கள் 25.41%, பெர்தா இன மக்கள் 21.69%, குமூஸ் இன மக்கள் 20.88%, ஒரோமியா இன மக்கள் 13.55%, சினாஷா இன மக்கள் 7.73% மற்றும் அவி இன மக்கள் 4.22% வாழ்கின்றனர். இப்பிரதேசத்தில் முக்கிய மொழிகளாக பெர்தா மொழி (25.15%), அம்மாரா மொழி (22.46%), குமூஸ் மொழி (20.59%), ஒரோமிய மொழி (17.69%), சினஷா மொழி (4.58%) மற்றும் அவிங்கி மொழி (4.01%) பேசபடுகிறது. இசுலாம் 45% பேர்களும், பழைமைவாத கிறித்தவத்தை 33.3% பேரும், சீர்திருத்த கிறித்துவத்தை 13.5% பேரும் மற்றும் 7.09% தொல்குடி சமயத்தையும் பின்பற்றுகின்றனர். 2018-ஆம் ஆண்டில் இப்பிரதேச மக்கள் தொகை 1,127,001 ஆக இருக்கும் எனக்கணிக்கப்பட்டுள்ளது. தெற்கு சூடானின் 36,400 அகதிகளுக்கு இப்பிரதேசத்தில் இரண்டு அகதிகள் முகாம்கள் உள்ளது. [4] சமயம்பெனிசாங்குல்-குமுஸ் பிரதேசத்தின் சமயம் (2007)[5] இசுலாம் (45%) பழைமைவாத கிறித்துவம் (33.3%) சீர்திருத்த கிறித்துவம் (13.5%) தொல்குடி நம்பிக்கையாளர்கள் (7.1%) கத்தோலிக்க கிறித்தவம் (0.6%) பிறர் (0.5%)
இனக் குழுக்கள்
ஆளுநர்கள்
(இந்த பட்டியல் அடிப்படையில் Worldstatesmen.org, John Young,[6] and the Ethiopian News Agency website[7]) நிர்வாகம்
எத்தியோப்பியாவின் பிரதேசங்கள்
எத்தியோப்பிய நகரங்கள்இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia