திக்ரே பிரதேசம் (Tigray Region) கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்த எத்தியோப்பியா நாட்டின் வடக்கில் திக்ரே பிரதேசம் அமைந்துள்ளது. இதனை திக்ரே தேசிய பிரதேச அரசு (National Regional State of Tigray) என்றும் அழைப்பர். திக்ரே பிரதேசத்தின் தலைநகரம் மெக்கெல்லே ஆகும்.
திக்ரே பிரதேசம் எத்தியோப்பியா நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்படுகிறது. [7] பழைமையான தம்மோத் இராச்சியத்தினர் திக்ரே மற்றும் எரித்திரியா பகுதிகளை கிமு 980 முதல் கிமு 400 வரை ஆண்டனர்.[8].[9] இப்பிரதேசம் சில நூற்றாண்டு காலமாக பண்டைய எகிப்து இராச்சியத்தின் கீழ் இருந்தது. அக்சும் இராச்சியத்தினர் திக்ரே பிரதேசத்தை மையமாகக் கொண்டு கிபி 100 முதல் கிபி 960 முடிய ஆட்சி செய்தனர்.[10][11][12][13]இப்பிரதேசத்தில் யூதம், கிறித்துவம் மற்றும் இசுலாமியச் சமயங்கள் தழைத்தோங்கியது. குறைசிகளால் முகமது நபி, மெக்காவிலிருந்து விரட்டியடிக்கப் போது, திக்ரே பிரதேசத்தில் தம்மை பின்பற்றுவர்களுடன் சிறிது காலம் வரை தஞ்சம் அடைந்தனர்.
12 செப்டம்பர் 1974 அன்று அரசர் ஹைலி_செலாசிக்கு எதிராக மாக்சிச-லெனினிச பாதுகாப்பு படைகள், காவல் துறையினர், பிராந்திய இராணுவம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புக் குழுவால் (சமதர்மவாத எத்தியோப்பாவின் இடைக்கால இராணுவ அரசாங்கம்) தொடங்கப்பட்ட இராணுவப்_புரட்சி ஆகும். கிளர்ச்சியாளர்களின் கூட்டணியான எத்தியோப்பிய மக்களின் புரட்சிகர மக்களாட்சி முன்னணி (EPRDF), 1991-ல் அரசை வீழ்த்தும் வரை இப்போர் நடந்தது[14]. இப்போரில் குறைந்தபட்சம் 14 லட்ச மக்கள் உயிரிழந்தனர்.
திக்ரே போர்
நவம்பர் 2020-ஆம் ஆண்டில் திக்ரே பிரதேச பொதுத் தேர்தல் முடிந்தவுடன், திக்ரே போராளிகள் தனி நாடு கோரி எத்தியோப்பியா மற்றும் எரித்திரியா அரசுப் படைகளுடன் கொரில்லாத் தாக்குதல்கள் தொடங்கினர்.[15][16]
கொரானா பெருந்தொற்று காரணமாக எத்தியோப்பியாவில் வறுமையும், பஞ்சமும் தலைவிரித்தாடியது.[17]
புவியியல்
கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்த எத்தியோப்பியா நாட்டின் வடக்கில் அமைந்த திக்ரே பிரதேசம் அதிகம் மலைகள் கொண்டது. அதில் 10 மலைகள் 2388 மீட்டரும், அதற்கு மேலும் உயரம் கொண்டது. அதில் பெர்ரா இம்பா மலை 3954 மீட்டர் உயரம் கொண்டது. [18]இம்மாகாணத்தில் உற்பத்தியாகும் தக்கீசு ஆறு கிழக்கு சூடான் மற்றும் எரித்திரியா வழியாக பாய்ந்து நைல் நதியுடன் கலக்கிறது.
மக்கள் தொகை பரம்பல்
2007-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, திக்ரே பிரதேசத்தின் மொத்த மக்கள் தொகை 4,316,988 ஆகும். மக்களில் பெரும்பான்மையாக கிறித்தவர்கள் 95.6% மற்றும் இசுலாமியர்கள் 4.01% ஆகவுள்ளனர்.[19]
திக்ரே பிரதேசத்தில் கிறித்தவர்கள் 4.01% ஆகவுள்ளனர்.
இனக்குழுக்கள்
திக்ரே பிரதேசத்தில் திக்ரே மொழி பேசுவர்கள் 96.55% ஆகவுள்ளனர். சகோ மொழி, குனாமா மொழி, சாம்தாங்கா மொழி, அம்ஹரிக் மொழி மற்றும் ஒரோமோ மொழிகள்[20] பேசும் இன மக்கள் 3.45%