அருவியூர் நகரத்தார் (Aruviyur Nagarathar) என்பது இந்தியாவின் சோழர் ஆட்சி காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் தோன்றிய, சைவ மதத்தின் கீழ் செட்டியார் சாதிக்குட்பட்ட நகரத்தார் சமூகமாகும். இவர்கள் தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் முக்கியமான வர்த்தக வைசிய சமுதாயமாகத் திகழ்கின்றனர்[1][2][3].. மிகப் பழமையான பண்பாட்டு மரபை கொண்ட இச்சமூகத்தினர், தாராள மனப்பான்மை, கோயில்களை கட்டிப் பராமரிக்கும் பணியில் ஈடுபடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். இவை இந்தியா மற்றும் ஆசியா முழுவதிலும் காணப்படுகின்றன. இவர்கள் அருவியூர் / அரியூர் / அரிவையூர் நகரத்தார் செட்டியார்களாகவும் அறியப்படுகின்றனர்.
நகரத்தார் என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு தமிழ் சமூக சாதியாகும். நகரத்தார் சமூகமானது ஒரு ஒற்றைச் சாதி அல்ல; மாறாக, பல தொடர்புடைய முப்பது துணைச் சமூகங்களிலிருந்து வளர்ந்து, காலப்போக்கில் "நகரத்தார்" என்ற ஒரே பெயரின் கீழ் அழைக்கப்படுகிறது.
நகரத்தார் என்ற சாதிப்பெயரை பயன்படுத்தும் சமூகங்கள்:
அருவியூர் நகரத்தார்கள், கல்வி வளர்ச்சிக்காக "அருவியூர் வடக்குவளவு நகரத்தார் கல்வி வளர்ச்சி கழகம்" என்ற நல ஒழுங்கமைப்பை 16 ஜனவரி 1982 அன்று திரு. A. L. முருகன் மற்றும் திரு. ந. திருநாவுக்கரசு ஆகியோரால் தமிழ்நாட்டின் பிரான்மலையில் நிறுவினர். இக்கழகம், அருவியூர் நகரத்தார் சமூக உறுப்பினர்களின் கல்வி தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, குறிப்பாக வசதியில்லாத மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைகளை வழங்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்டது.
நகரத்தார் என்ற சொல்லுக்கு "நகரவாசி" என்று பொருள். அவர்களின் பட்டப்பெயர் செட்டியார், என்பது பல வணிகக் குழுக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சொல்லாகும், இது பண்டைய தமிழ் வார்த்தையான எட்டி ( தமிழ் மன்னர்களால் வணிகர்களுக்கு வழங்கப்பட்டது ) என்பதிலிருந்து பெறப்பட்டது.
அருவியூர் நகரத்தார் வழிபடும் மற்றும் பராமரிக்கும் முக்கிய கோவில்கள்
கொங்குச் செட்டியார் (கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டம் மாவட்டங்களில் மட்டும்)
குறிப்புகள்
தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டுப் பட்டியல் >> முற்பட்ட சாதிகள் >> அரியூர்ச் செட்டியார் (அரிவையூர்ச் செட்டியார், அரியூர் நகரத்தார்) (706) > ஒதுக்கப்பட்ட சாதி எண் 706.
அருவியூர் நகரத்தார் வரலாறு பகுதி 1 (2897BC முதல் இன்றுவரை) - சூர்யா பிரிண்ட் சொலுஷன்ஸ், சிவகாசி - 2010.
தர்ஸ்டன், எட்கர் (1909). தென்னிந்தியாவின் சாதிகள் மற்றும் பழங்குடியினர். மெட்ராஸ்: அரசு அச்சகம். பக். 257-270 தொகுதி 5.
தர்ஸ்டன், எட்கர் (21 ஜூன் 2013). "தலைப்பு: தென்னிந்தியாவின் சாதிகள் மற்றும் பழங்குடியினர்" . குட்டன்பெர்க்.
பட்டு வேஷ்டி ராமநாதன், செட்டியார் (2015). Analytical History of Nagarathar (நகரத்தார்களின் பகுத்தாய்ந்த வரலாறு) . சிவகாசி: சூர்யா பிரிண்ட் சொல்யூஷன்ஸ்.
எம்ஆர் எம் கேஆர் எம், சோமசுந்தரம் (2003). நாம் நம் சேரா. காரைக்குடி: மெய்யப்பன் ஆஃப்செட் பிரிண்டர்ஸ். பக். 7–9.
மதுரை நகரத்தார், சங்கம். History of Uruthikottai Vattagai (உறுதிக்கோட்டை வட்டகை வரலாறு) . மதுரை.
ஸ்ரீ நிரம்ப அழகிய, தேசிக சுவாமிகள் (1994). History of Atheenam and Nagarathar (ஆதீன வரலாறும் நகரத்தார் வரலாறும்) . துலாவூர் காரைக்குடி: மீனாட்சி பிரிண்டர்ஸ். ப. 47.
தியாகராஜன், விஎன் (1989). Uruthikottai Vattagai Nagarathar (உறுதிக்கோட்டை வட்டகை நகரத்தார் - நாட்டுக்கோட்டை நகரத்தார்களே ! ஆதாரங்கள் கையேடு) . கோயம்புத்தூர். ப. 4.
நகரத்தார் மலர்(Nagarathar Malar) 15 நவம்பர் 1988. பக். 19.