அர்டீபிலக்சு ஓர்டென்சிசு
அர்டீபிலக்சு ஓர்டென்சிசு (தாவரவியல் பெயர்: Atriplex hortensis, ஆங்கிலம்: garden orache, red orache, orache (/ˈɒrətʃ/;[3] அல்லது orach), mountain spinach, French spinach, அல்லது arrach,) என்பது பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம் அமராந்தேசியே என்ற தாவரவியல் குடும்பத்தின் கீழ் அமைந்துள்ளது. இது பசளியைப் போன்றதொரு கீரை ஆகும். மிதவெப்ப வலயத்தில் இது வளரும் இயல்புடையது. இது வருடம் முழுவதும் வளரும் தாவரமாகும். தண்டு நேராகவும், கிளைகளுடன் காணப்படுகின்றன.[4] இதன் உயரம் 2 முதல் 6 அடிகள் வரை வளர்கிறது. இதன் இலைகள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதன் சுவை சற்று புளிப்பாக இருக்கும். இலைகள் சூழ்நிலையின் வெப்பத்திற்கு ஏற்ப பச்சை நிறமாகவும், இளஞ்சிவப்பாகவும் காணப்படுகின்றன.[5] பூக்கள் சிறியதாக உள்ளன. விதைகள் கருநிறத்தில் இருக்கும். இக்கீரையின் ருசி பசளி போன்றும், சற்று உப்புச்சுவையுடனும் இருக்கும். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia