தாஜ்மகால் (திரைப்படம்)

தாஜ்மகால்
சுவரிதழ்
இயக்கம்பாரதிராஜா
கதைஆர். செல்வராஜ்
திரைக்கதைபாரதிராஜா
இசைஏ. ஆர். ரஹ்மான்
நடிப்புமனோஜ்
ரியா சென்
மணிவண்ணன்
வெளியீடு1999
நாடு இந்தியா
மொழிதமிழ்

தாஜ்மகால் (Taj Mahal) 1999 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] தனது மகனான மனோஜ் கதாநாயகனாகவும், ரியா சென் கதாநாயகியாகவும் நடித்த இப்படத்தை பாரதிராஜா இயக்கினார். பாரதிராஜா தனது மகன் மனோஜை இப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார்.[2]

கதைச்சுருக்கம்

தனக்குள்ளே உட்பகையையும், பழிவாங்கலையும் கொண்டு விளங்கும் இரு கிராமங்களிடையே, திரைக்கதை நடக்கிறது. இத்தகைய கிராமம் ஒன்றில் கதாநாயகனும், கதாநாயகி மற்றொரு கிராமத்திலும் வாழ்கின்றனர். 'கண்டதும் காதல்' என்ற அடிப்படையில் இவர்களிடையே காதல் மலர்கிறது. இக்காதலை, அவர்களின் பெற்றோர் கடுமையாக எதிர்கின்றனர். இச்சூழலில் கதாநாயகியின் அண்ணன், பார்த்த வேறொரு மாப்பிள்ளையைக் கதாநாயகி மணக்கிறாரா? என்பதே கதை. வியப்புடனான முடிவுடன் கதை முடிகிறது.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "திருப்பாச்சி அருவாள"  கல்பனா ராகவேந்தர், கிளிண்டன் செரஜோ, பாலக்காடு சிறீராம், சந்திரன் 6:55
2. "சொட்ட சொட்ட" (பெண்குரல்)சுஜாதா மோகன் 5:45
3. "அடி மஞ்சக்கிழங்கே"  கங்கா சித்தரசு, பெபி மணி, தேனி குஞ்சரமாள், காஞ்சனா 2:52
4. "கிழக்கே நந்தவனம்"  கங்கா சித்தரசு, பெபி மணி, தேனி குஞ்சரம்மாள், காஞ்சனா  
5. "சி சி எழுமிச்சி"  மனோஜ் பாரதிராஜா, அருந்ததி, இரகூப் அலாம், பார்த்தசாரதி (வீணையின் முதல் இடையிசையில்), நவின் (புல்லாங்குழலின் இரண்டாவது இடையிசையில்)  
6. "அடி நீ எங்கே. சொட்ட சொட்ட" (ஆண்குரல்)ஸ்ரீநிவாஸ் 5:32
7. "குளிரிது குளிரிது"  பி. உன்னிகிருஷ்ணன், சுவர்ணலதா, ஆர். விஷ்வேஸ்வரன் (ஈரானியச் சந்தூரின் இரண்டாவது இடையிசையில்) 4:44
8. "செங்காத்தே செங்காத்தே"  டி. கே. கலா, இரிச்சா சர்மா (பின்னணியில் பஞ்சாப் பாடல் இரப்பா வே)  
9. "சி சி எழுமிச்சி"  கிருஷ்ணராஜ், அருந்ததி, இரகூப் அலாம்  
10. "கரிசல் தரசில்"  எம். ஜி. ஸ்ரீகுமார், சித்ரா, ஸ்ரீநிவாஸ் (ஆலாபனை)  

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya