ஆடிக் கார்த்திகை

ஆடிக் கார்த்திகை
கடைப்பிடிப்போர்தென்னிந்தியா, இலங்கையில் உள்ள இந்துக்கள்
வகைசமய விழா
முக்கியத்துவம்முருகப்பெருமானுக்கு உகந்த நாள்
கொண்டாட்டங்கள்முருகன் கோவில் கொண்டாட்டம், பெண்களுக்கு மங்களகரமானது
நாள்ஆடிக் கார்த்திகை
நிகழ்வுஆண்டுதோறும்
தொடர்புடையனகௌமாரம்

ஆடிக் கார்த்திகை என்பது ஆடித் திங்கள் கார்த்திகை நாளில் கொண்டாடப்படும் இந்து சமய விழாவாகும். இவ்விழா நாளில் முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.[1] இது தென்னிந்தியா, இலங்கை மற்றும் புலம்பெயர்ந்தோர் இடையில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[2]

முன்னுரை

பொதுவாக தென்னிந்திய பாரம்பரியத்தின் படி கார்த்திகை நாளே முருகன் வழிபாட்டிற்கு உகந்த நாள் ஆகும். அதிலும் தெய்வ வழிபாடுகள் செய்ய உகந்த ஆடித் திங்களில் வரும் கார்த்திகை நாள் மிகவும் சிறப்பிற்குரியது. ஆடிக் கார்த்திகையில் ஆறுமுகனை வழிபடத் தேடிவரும் நன்மை என்பது தமிழ் ஆன்றோர் வாக்கு ஆகும். ஆடிக் கார்த்திகை நன்னாளில் ஆறுமுகனை வணங்கினால், கர்ம வினைகள் நீங்கும்; செவ்வாய் தோஷம் அகலும்; திருமணத் தடைகள் நீங்கும். சொந்த வீடு, வாகன வசதி, தொழில் அபிவிருத்தி போன்றவை ஸித்திக்கும் என்கின்றனர் அடியார்கள்.[3]

தொன்மம்

முருகன் பிறந்தது விசாக நாண்மீன் என்று சொல்லப் பட்டாலும், அவனைப் பாலூட்டி வளர்த்தது ஆறு கார்த்திகைப் பெண்கள் “கார்த்திகை” நாண்மீன்களாக மாறி அன்றைய நாளை ஆடிக் கார்த்திகையாக நோன்பிருந்து வழிபடுகிறார்கள்.[4] முருகனுக்கு திதிகளில் சஷ்டியும், கிழமைகளில் வெள்ளிக்கிழமையும், நாண்மீன்களில் கார்த்திகையும் சிறப்பு. ஆடித் திங்களிலிருந்து தொடங்கி ஆறுதிங்கள்கள் கார்த்திகை நோன்பு இருந்து தைத் திங்கள் கார்த்திகையில் நோன்பை முடிக்கலாம்.[5]

நோன்புமுறைகள்

நோன்பு இருப்பவர்கள் கடைப்பிடிக்கவேண்டிய பொதுவான நோன்புமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் முருகனிற்குரிய நோன்புகளில் உப்பு தவிர்க்கப் படுவதை முக்கியமாய்க் கருதுகின்றனர். உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை நோன்போ, சஷ்டி நோன்போ இருத்தல் சிறப்பாகவும், உயர்வாகவும் கருதப் படுகிறது.[6]

சிறப்பு

மழைக்காலத் தொடக்கமான தென்செலவு பொதுவாக அனைத்து இறை வழிபாடுகளிற்கும் ஏற்றதாகவும், வடசெலவு திருமணம், உபநயனம், புதுமனை புகுதல் போன்ற முக்கிய நிகழ்வுகளிற்கு ஏற்றதாகவும் சொல்லப் படுகிறது. ஆடித் திங்களில் இருந்து வரிசையாக அனைத்துக் கடவுளரையும் வேண்டிச் செய்யும் விழாக்களும், நோன்புகளும் வருகின்றன. தேவர்களின் மாலைக்காலம் என்று சொல்லப் படும் இத்திங்களில் வழிபாடுகள் அதனாலேயே நடத்தப் படுகிறது.

மேற்கோள்கள்

  1. "ஆடிக்கிருத்திகை தினத்தன்று முருகனுக்கு விரத வழிபாடு". மாலைமலர். https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/08/04095955/1181606/aadi-krithigai-viratham.vpf. பார்த்த நாள்: 6 April 2021. 
  2. "ஆடிக்கிருத்திகை.. முருகனின் அருள் கிடைக்கட்டும் - பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து". News18 Tamil. 2022-07-23. Retrieved 2022-07-23.
  3. சைலபதி. "Aadi Krithigai | ஆடிக் கிருத்திகையின் சிறப்புகள் | வீட்டில் வழிபடுவது எப்படி?| Saraswathi Ramanathan". www.vikatan.com/. Retrieved 2022-07-23.
  4. "இன்று ஆடி கிருத்திகை : கர்ம வினைகள் நீங்க முருகன் வழிபாடு!!". தினகரன் இம் மூலத்தில் இருந்து 3 செப்டம்பர் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190903062941/http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=24535. பார்த்த நாள்: 6 April 2021. 
  5. Siva (2021-12-26). "கிருத்திகை விரத நாட்கள் 2021". Dheivegam. Retrieved 2022-07-23.
  6. "ஆடி கிருத்திகை: சகல செல்வங்களும் அள்ளித்தரும் விரத வழிபாடு!". Samayam Tamil. Retrieved 2022-07-23.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya