ஆன்ட் மேன் (இசுகாட்காட் லாங்)
ஆன்ட் மேன் (இசுகாட்காட் லாங்) (ஆங்கிலம்: Ant-Man (Scott Lang)) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரம் டேவிட் மிச்செலினி, பாப் லேடன் மற்றும் ஜான் பைர்ன் ஆகியோரால், மார்ச் 1979 இல் வெளியான அவென்ஜர்ஸ் #181 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது. இது ஆன்ட் மேன் பெயரைப் பயன்படுத்திய இரண்டாவது மீநாயகன் பாத்திரம் ஆகும். இவரின் கதாபாத்திரம் சீர்திருத்த திருடன் மற்றும் மின்னணுவியல் நிபுணராக, அவென்ஜர்ஸ், பென்டாஸ்டிக் போர் மற்றும் கார்டியன்சு ஒப் த கலக்சி ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார். பின்னர் 2015 இல் ஆன்ட் மேன் தொடரின் தலைப்புக் கதாபாத்திரமானார். இவர் இன்டர்நேஷனல் நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட ஒரு முன்னாள் குற்றவாளி மற்றும் இயந்திர நிபுணராவார், தனது மகள் கசாண்ட்ரா "காஸ்ஸி" லாங்கை இதய நோயிலிருந்து இருந்து காப்பாற்ற எறும்பு மனிதன் உடையை திருடிய பிறகு ஆன்ட் மேன் ஆனார். தனது குற்ற வாழ்க்கையிலிருந்து சீர்திருத்தப்பட்ட லாங் என்பவர் காங்க் பிம்மின் உதவியுடன் இரண்டாவது முழுநேர ஆன்ட் மேன் வாழ்க்கையை மேற்கொண்டார். இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகர் பால் ருத் என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான ஆன்ட்-மேன் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016)[1][2][3], ஆன்ட்-மேன் மற்றும் தி வாஸ்ப் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) மற்றும் ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா (2023) போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் 2021 இல் வெளியான வாட் இப்...?[4][5] என்ற டிஸ்னி+ இயங்குபட தொடருக்கும் குரல் கொடுத்துள்ளார். மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia