கய்ம்டல்
கய்ம்டல் (ஆங்கிலம்: Heimdall)[1] என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரம் நோர்சு தொன்மவியல் தெய்வமான கய்ம்டல் என்பவரை அடிப்படையாகக் கொண்டு, ஸ்டான் லீ, லாரி லிபர் மற்றும் ஜாக் கிர்பி ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இவரால் அனைத்தையும் பார்க்கவும் மற்றும் கேட்கவும் முடியும் அத்துடன் மேலும் அஸ்கார்டின் நுழைவாயிலின் ஒரே பாதுகாவலராக இருக்கிறார். இந்த கதாபாத்திரம் வரைகதையில் இருந்து திரைப்படத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகர் இட்ரிசு எல்பா என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான தோர் (2011),[2] தோர்: த டார்க் வேர்ல்டு (2013), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015),[3] தோர்: ரக்னராக் (2017) மற்றும் அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018) போன்ற படங்களில் நடித்துள்ளார். மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia