ஆன்ட்-மேன் திரைப்படத்தின் மூன்றாவது படத்திட்டங்கள் நவம்பர் 2019 இல் உறுதி செய்யப்பட்டன, இப்படத்தில் பெய்டன் ரீட் மற்றும் பால் ருத் ஆகியோர் மீண்டும் பணிபுரிகின்றனர். கோவிட்-19 பெருந்தொற்று நோயின் போது ஏப்ரல் 2020 க்குள் ஜெஃப் லவ்னஸ் பணியமர்த்தப்பட்டார். அதை தொடர்ந்து இப்படத்தின் தலைப்பு மற்றும் புதிய நடிகர்கள் பற்றிய அறிவுப்பு டிசம்பர் 2020 இல் அறிவிக்கப்பட்டது. முதல் கட்ட பட பிடிப்பு பிப்ரவரி 2021 இல் துருக்கியில் நடைபெற்றது,[13] அதே நேரத்தில் கூடுதல் படப்பிடிப்பு சான் பிரான்சிஸ்கோவில் ஜூன் நடுப்பகுதியில் நடந்தது, ஜூலை மாத இறுதியில் பக்கிங்ஹாம்ஷையரில் உள்ள பைன்வுட் படப்பிடிப்பு வளாகத்தில் முதன்மை புகைப்படம் எடுக்கப்பட்டது.
ஆன்ட்-மேன் அண்ட் த வாஸ்ப்: குவாண்டுமேனியா என்ற படம் பிப்ரவரி 6, 2023 அன்று வெஸ்ட்வுட், லாஸ் ஏஞ்சல்ஸில் திரையிடப்பட்டது, மேலும் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின்ஐந்தாம் கட்டத்தில் முதல் படமாக பிப்ரவரி 17 அன்று அமெரிக்காவில் வெளியாகி, உலகளவில் $476.1 மில்லியன் வசூலித்த போதிலும், இது வசூல் ரீதியாக ஏமாற்றத்தை அளித்தது மற்றும் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
↑Ahmet, Yildirim (February 5, 2021). "Ant-Man Türkiye'de çekiliyor!". Teknolojioku.com. Archived from the original on February 5, 2021. Retrieved February 5, 2021.