ராக்கெட் ரக்கூன்
ராக்கெட் ரக்கூன் (ஆங்கிலம்: Rocket Raccoon) என்பது மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்டு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் தோன்றிய ஒரு கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்தக் கதாபாத்திரத்தை எழுத்தாளர்கள் பில் மான்ட்லோ மற்றும் கீத் கிஃபென் ஆகியோர் உருவாக்கினார்கள்.[1] இவரின் முதல் தோற்றம் கோடை 1976 இல் வெளியான 'மார்வெல் பிரிவியூ' #7 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது.[2] இவர் ஒரு புத்திசாலி, சிறந்த தந்திரவாதி, கள தளபதி மற்றும் ஆயுத நிபுணர் ஆவார். இவரது பெயரும் மற்றும் கதாபாத்திரத்தின் அம்சங்களும் 'தி பீட்டில்ஸின் 1968' பாடலான "ராக்கி ரக்கூன்" க்கு ஒப்புதல் அளிக்கிறது.[3] ராக்கெட் ரக்கூன் 2008 ஆம் ஆண்டு வெளியான மீநாயகன் அணியான கார்டியன்சு ஒப் த கலக்சியின் மறுதொடக்கத்தில் ஒரு முக்கிய உறுப்பினராக தோற்றுவிக்கப்பட்டது. இந்த கதாபாத்திரம் வரைகதையில் இருந்து திரைப்படங்கள், இயங்குபட தொலைக்காட்சித் தொடர்கள், பொம்மைகள் மற்றும் வர்த்தக அட்டைகள் உட்பட பல்வேறு தொடர்புடைய மார்வெல் பொருட்களில் இடம் பெற்றுள்ளது. இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகர் பிராட்லி கூப்பர் என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்ச திரைப்படங்களான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி (2014), கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019), தோர்: லவ் அண்ட் தண்டர் (2022) போன்ற திரைப்படங்களுக்கு குரல் கொடுக்க, சீன் கன் என்னவர் இயங்குப்பட தோற்றத்தில் நடித்து இருந்தார். மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia