இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்
இந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர், இந்திய தேசத்தின் தலைவர் மற்றும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதியும் ஆவார். இந்திய ஜனாதிபதி நாட்டின் முதல் குடிமகன் எனக் குறிப்பிடப்படுகிறார்.[1][2] இந்திய அரசியலமைப்பின் வாயிலாக இந்த அதிகாரங்கள் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்ட போதிலும், இந்த நிலை பெரும்பாலும் மரபுசார்ந்த ஒன்றாகும். ஆயினும் உண்மையில் பிரதம மந்திரி செயலாற்றும் அதிகாரங்களை நடைமுறையில் கொண்டிருப்பார்.[3] இந்திய குடியரசுத் தலைவர் என்பவர் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை என்றாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தின் உறுப்புகளாகிய, மக்களவை மற்றும் மாநிலங்களவை, மாநில சட்டப் பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இந்திய அரசியலமைப்பின் பகுதி V கட்டுரை 56 இல் கூறியுள்ளதன்படி, குடியரசுத் தலைவர் ஐந்தாண்டு காலம் பதவியில் இருப்பார். குடியரசுத் தலைவரின் அலுவல் காலத்தின் பொழுது பதவிநீக்கம் செய்யப்படும் நேரங்களில் அல்லது குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இல்லாத நேரங்களில் துணை ஜனாதிபதி குடியரசுத் தலைவர் பொறுப்பினை ஏற்றுக்கொள்கிறார். பாகம் V இன் 70 ஆவது பிரிவின்படி, எதிர்பாராத தற்செயல் நிகழ்வின் பொழுது குடியரசுத் தலைவர் எவ்வாறு செயல்படுவது அல்லது அவரின் பொறுப்பினைப் பறிக்க வேண்டிய காலங்களில் பாராளுமன்றம் கூடித் தீர்மானிக்கலாம். இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல் பின்வருமாறு: பட்டியல்புள்ளிவிவரம்கட்சி வாரியாக குடியரசுத் தலைவரின் பிரதிநிதித்துவம் இந்திய தேசிய காங்கிரசு (41.2%) சுயேட்சை (29.4%) பாரதிய ஜனதா கட்சி (5.9%) ஜனதா கட்சி (5.9%) தற்காலிகம் (17.6%)
![]() வாழும் முன்னாள் குடியரசுத் தலைவர்கள்27 மே 2025 நிலவரப்படி, இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர்கள் இருவர் வாழுகின்றனர்:
2020 ஆகத்து 31 அன்று, 84 வயதில் முன்னாள் குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி மரணமடைந்தார்.[5]. இவற்றையும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia