இரண்டாம் ஜாய் மாணிக்கியா
இரண்டாம் ஜாய் மாணிக்கியா (Joy Manikya II) (இறப்பு 1746) 18 ஆம் நூற்றாண்டின் மத்தியில் திரிபுரா இராச்சியத்தை ஆண்ட மாணிக்கிய வம்சத்தைச் சேர்ந்த அரசனாவார். இவர் முதலில் முகலாயப் பேரரசின் மீதான இராணுவ விரோதப் போக்கிற்காக மக்கள் அங்கீகாரத்தின் மூலம் அரியணையைப் பெற்றார். இருப்பினும், ஜாய் தனது ஆட்சியின் பெரும்பகுதியை பல்வேறு உறவுகளுக்கு எதிராகப் போரிட்டு அதில் தனது பிடியைத் தக்க வைத்துக் கொண்டார். குறிப்பாக இவரது உறவினர் இரண்டாம் இந்திர மாணிக்கியாவுடன் மோதலிலேயே இருந்தார்.. பின்னணிமுதலில் ருத்ரமணி தாக்கூர் என்று பெயரிடப்பட்ட இவர், அரச குடும்பத்தின் கிளை வம்சத்தைச் சேர்ந்தவர்; அவரது தந்தை ஹரதன் தாக்கூர் மகாராஜா கோவிந்த மாணிக்கியாவின் இளைய சகோதரரான ஜெகந்நாத் தாக்கூரின் பேரன் ஆவார். [3][4] வரலாறுஒரு இளைஞனாக, ருத்ரமணி ஒரு முக்கிய தளபதியாக இருந்தா. திரிபுரா மீதான முகலாயப் பேரரசின் ஆதிக்கத்தை எதிர்த்தார். இதற்காக, ஆக்கிரமிப்பு படைக்கு எதிராக ஒரு தேசிய போராளிகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தார். மதியா மலைகளின் (யானைகளைப் பிடிக்க இவர் அனுப்பப்பட்ட இடம்) தனது தளத்தில் இருந்து, பழங்குடியின தலைவர்களின் உதவியுடன் ருத்ரமணி ஒரு வலுவான படையை உருவாக்கினார். இவர் அப்போதைய மன்னர் முகுந்த மாணிக்கியாவுக்கு, திரிபுரா மக்கள் முகலாயர்களை எதிர்க்கிறார்கள் என்றும், அவர் ஒப்புதல் அளித்தால், தான், உதய்ப்பூரில் உள்ள பௌஜ்தாரையும், ஹாஜி முன்சாம் மற்றும் அவரது ஆட்களையும் கொல்ல ஏற்பாடு செய்யலாம் என்றும் கடிதம் எழுதினார். இதனை நிராகரித்த முகுந்தா இச்சதி திட்டத்தை முன்சாமிடம் தெரிவிக்க விரும்பினார்.[5] ஆட்சியானைகளுக்கு காணிக்கை செலுத்தத் தவறியதற்காக முகலாயர்களால் கைது செய்யப்பட்ட முகுந்த மாணிக்கியா 1739 ஆம் ஆண்டில், தற்கொலை செய்து கொண்டார். மறுமொழியாக, ருத்ரமணி உதய்ப்பூரின் மீது திடீர் தாக்குதல் நடத்தி, முகலாயர்கள் காவலில் இருந்து பிடிபட்ட நிலையில், சமரசத்திற்கு வந்து நகரத்தை சரணடைந்தவுடன் அதை ஆக்கிரமித்தார். இவரது நடவடிக்கைகள் திரிபுரி மக்களிடையே பிரபலமாக இருந்தன. முகுந்தாவின் மகன்களுக்கு எதிராக இவரை புதிய மன்னராக தேர்வு செய்தனர். ருத்ரமணி பின்னர் ஜாய் மாணிக்கியா என்ற ஆட்சிப் பெயருடன் அரியணை ஏறினார்.[4] 1744 ஆம் ஆண்டில், முகலாய துணைத் தலைநகர் முர்சிதாபாத்தில் வசிக்கும் முகுந்தனின் மகனான பஞ்ச கௌரி தாக்கூர் என்கிற இரண்டாம் இந்திர மாணிக்கியா திரிபுராவை ஜாய்யிடம் இருந்து கைப்பற்றுவதற்கு உதவுவதற்காக வங்காள நவாப் அலிவர்தி கானை அணுகினார்.[6][7] முகலாயர்கள் தங்கள் முந்தைய தோல்வியிலிருந்து மீள்வதற்காக பஞ்ச கௌரிக்கு இராணுவ ஆதரவை வழங்கினர்.[8] அவர் அரியணையை கைப்பற்ற முடிந்தது. மேலும், இந்திர மாணிக்கியா என்ற பெயருடன் ஆட்சிக்கு வந்தார்.[6] ஜாய் தலைநகரில் இருந்து விலகி, மதியா மலைகளிலிருந்து ஒரு இணையான அரசாங்கத்தை நடத்தினார். முகலாயப் படைகளால் பின்வாங்கப்பட்ட போதிலும், முழு அதிகாரத்தையும் திரும்பப் பெற பலமுறை முயற்சிகளை மேற்கொண்டார்.[4][8] ஜாய் முகலாயர்களின் ஆதரவைப் பெற்று மீண்டும் அரியணையை கைப்பற்றுவதற்கு முன், நாடு சிறிது காலத்திற்கு போட்டி மன்னர்களின் கட்சிகளுக்கு இடையில் பிளவுபட்டது.[9] இந்த நேரத்தில், மற்றொரு உறவினர், இரண்டாம் தர்ம மாணிக்கியாவின் மகன், உள்நாட்டுப் பிளவுகளைப் பயன்படுத்தி, அதிகாரத்திற்கான தனது சொந்த கோரிக்கையை முன்வைத்தார்.[6] அவர் டாக்காவின் நைப் நாஜிமுக்கு லஞ்சம் கொடுத்தார். உதய் மாணிக்கியா என்ற பெயரைக் கொண்டு வலுவான முஸ்லிம் இராணுவத்துடன் கொமிலாவுக்கு வந்தார். ஜாய் இந்தத் தாக்குதலை எதிர்த்தாலும், உதய் இவரை அடிபணியும்படி கட்டாயப்படுத்தி வெளியேற்றினார். இருப்பினும், இவர் முகலாயர்களுக்கு அளிக்க வேண்டிய கப்பம் நிலுவையில் இருந்தது. ஜாய்க்கு எதிராக ஒரு இராணுவம் அனுப்பப்பட்டது. அது இவரைத் போரில் தோற்கடித்தது. இவரது ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டு முர்சிதாபாத் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்திர மாணிக்யா மீண்டும் திரிபுராவின் ஆட்சியாளராக பதவியேற்றார்.[10] மீண்டும் ஆட்சிக்கு வருதல்1746 வாக்கில், இந்திரன் நவாபின் வெறுப்புக்கு ஆளான பிறகு ஜாய் மூன்றாவது முறையாக ராச்சியத்தின் கட்டுப்பாட்டைப் பெற்றார். இருப்பினும், இவர் அரியணையில் எஞ்சியிருந்த காலம் மிகக் குறுகியதாகவே இருந்தது, அதில் பெரும்பகுதி இந்திரனின் தம்பி கிருஷ்ணமணியால் ஏற்பட்ட தொந்தரவிலேயே சென்றது. அதே ஆண்டு ஜாய் இறந்ததைத் தொடர்ந்து, இவரது இளைய சகோதரர் மூன்றாம் விசய மாணிக்கியா அரசன் ஆனார்.[11][12] சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia