இராஜ கண்ணப்பன்
இராஜ கண்ணப்பன் (R. S. Raja Kannappan) (எஸ். கண்ணப்பன் என்றும் அழைக்கப்படுகிறார்) என்பவர் தமிழக அரசியல்வாதியும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் இருந்து 1991 ஆண்டு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இவர் பொதுப்பணித்துறை அமைச்சராக ஜெ. ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 1991-1996 ஆண்டைய காலகட்டத்தில் இருந்தார். பிறகு மக்கள் தமிழ் தேசம் என்ற தனிக்கட்சியை துவக்கினார்.[2] பின்னர் 2001 ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். 2006, ஆண்டு தனது கட்சியை கலைத்துவிட்டு தி.மு.கவில் இணைத்தார். 2006 சட்டமன்றத் தேர்தலில் திமுக, சார்பில் இளையான்குடியில் போட்டியிட்டு வென்றார். பிப்ரவரி 2009 இல் தி.மு.க சார்பில் போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர் பதவியை விட்டு விலகி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மீண்டும் இணைந்து, 2009 நாடாளுமன்றத் தேர்தலில், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் அஇஅதிமுக சார்பில் போட்டியிட்டு, இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளரான ப. சிதம்பரத்திடம் தோல்வியுற்றார்.[3][4][5]. பின்னர் அஇஅதிமுகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்தார். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக போட்டியிட்டார். இத்தேர்தலில் 1,01,901 வாக்குகள் பெற்று தமிழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6] பின்னர் 2021, மே 7 அன்று போக்குவரத்துத்துறை அமைச்சசராக பதவியேற்றார்.[7] பிறகு, 29 மார்ச்சு 2022 அன்று முதல் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பொறுப்பு மாற்றப்பட்டுள்ளார்.[8]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia