இரா. ந. மல்கோத்ரா
இராம் நரேன் மல்கோத்ரா[1] (Ram Nrain Malhotra) என்பவர் பிரபலமாக ஆர். என். மல்கோத்ரா (R. N. Malhotra, பிறப்பு 1926[2]; இறப்பு 29 ஏப்ரல் 1997[3][4]) அறியப்படுகிறார். இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் பதினேழாவது ஆளுநராக 4 பிப்ரவரி 1985 முதல் 22 திசம்பர் 1990 வரை பணியாற்றினார்.[5][6][7][8] மல்கோத்ரா இந்திய ஆட்சிப் பணி உறுப்பினராக இருந்தார். இவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படுவதற்கு முன்பு நிதிச் செயலாளராகவும், பன்னாட்டு நாணய நிதியத்தின் இந்தியாவின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவரது பதவிக்காலத்தில், 500 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 1986ஆம் ஆண்டு 50 ரூபாய் நோட்டில் இவர் கையெழுத்திட்டார். 1990ஆம் ஆண்டில் இவர் பத்ம பூசண் விருதைப் பெற்றார்.[5] மல்கோத்ராவின் மனைவி அன்னா ராஜம் மல்கோத்ரா இவர் இந்திய நிர்வாக சேவை முதல் பெண் உறுப்பினராக இருந்தவர் ஆவார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia