இளமை ஊஞ்சலாடுகிறது
இளமை ஊஞ்சலாடுகிறது (Ilamai Oonjal Aadukiradhu) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படமானது 175 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடியது. இத்திரைப்படம் அந்த ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் வென்றது. இத்திரைப்படம் தெலுங்கில் அதே ஆண்டில் 'வயசு பிலிசின்டி' மற்றும் இந்தியில் 1982 ஆண்டில் 'தில் இ நடான்' எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது.[2] நடிகர்கள்
தயாரிப்புஇப்படத்திற்காக இசையமைக்க முதலில் எம். எஸ். விஸ்வநாதன் முடிவு செய்தார் ஸ்ரீதர். பின்னர் மாறுதல் செய்யப்பட்டு இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்தில் பி. வாசு மற்றும் சந்தான பாரதி உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளனர்.[3] பாடல்கள்இப்படம் 1978ல் வெளியானது. இளையராஜா இசையமைத்த பாடல்களை எஸ். பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம், கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன் ஆகியோர் பாடியிருந்தனர். பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி.
விருதுகள்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia