ஒரு ஓடை நதியாகிறது
ஒரு ஓடை நதியாகிறது என்ற திரைப்படம் ரகுவரன் முன்னணி பாத்திரத்தில் நடித்து, ஸ்ரீதரால் எழுதி இயக்கி தயாரிக்கப்பட்டு 1983 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்[1] புகழ் பெற்ற நடிகர் டி.எஸ். பாலையாவின் மகள் மனோசித்ராவும் நடிகை சுமலதாவும் இப்படத்தின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கதைச்சுருக்கம்ரகுவரன் தனது நண்பருடன் வெளியூர் சென்று விருந்து முடிந்து இரவு திரும்பி வருகையில் ஒரு பெண்ணைப் பார்க்கிறார். அப்போது நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது. அப்பெண்ணைக் கண்டவுடன் மோகித்த ரகுவரன் அவளைக் கற்பழித்துவிட்டு, அங்கேயே விட்டு விட்டுச் சென்றுவிடுகிறார். ரகுவரன் இச்சம்பவத்தைப் பற்றித் தனது நண்பரிடம் பேசுகிறார். அவருடைய நண்பரும் அவளும் இச்சம்பவத்தை மறந்திருப்பாள் எனவும் அந்தப் பெண்ணைத் தேட வேண்டாம் என்றும் ஆலோசனை கூறுகிறார். ஆனால் குற்ற உணர்ச்சியால் தாக்கப்பட்ட ரகுவரன் அப்பெண்ணைத் தேடி வருகிறார். ஆனால் அவளைக் கண்டுபிடிக்க இயலவில்லை. இதற்கிடையில் அப்பெண்(சுமலதா) கர்ப்பமடைகிறாள். இச்சம்பவத்தைப் பற்றி வெளியில் சொல்லமுடியாத நிலையில் மிகவும் வேதனையுடன் அவளுடைய தந்தையுடன் (பிரதாப்சந்திரன்) அந்த ஊரிலிருந்து வேறு புதிய இடத்திற்கு இடம் மாறுகிறாள். அங்கே அவள் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அந்த தீராத மழைக்கால இரவில் அவள் கண்ட முகத்தை நினைவுபடுத்த முயற்சிக்கிறாள். இதற்கிடையில், அனைவருடைய வற்புறுத்தலின் பேரில் ரகுவரன் மனோசித்ராவை திருமணம் செய்துகொள்கிறார். ஆனாலும் கூட ரகுவரன் தன்னால் கற்பழிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய நினைவாகவே இருக்கிறார். இதன் பிறகு சுமலதா, ரகுவரன் மற்றும் மனோசித்ராவிற்கு என்ன நடக்கிறது என்பதும் ரகுவரன் தனது மகனை எவ்வாறு அடையாளம் காண்கிறார் என்பதை படத்தின் முடிவின் மூலம் காணலாம். நடிகர்கள்
ஒலிப்பதிவு
இது எஸ். பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி, கிருஷ்ணசந்தர், பி. ௭ஸ். சசிரேகா மற்றும் எம். எஸ். இராஜேஸ்வரி ஆகியோரால் பாடப்பட்டு இசையமைப்பாளர் இளையராஜாவால் மிகவும் வெற்றிகரமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டத் திரைப்படமாகும்.[4][5] இதில் இடம் பெற்ற "தென்றல் என்னை முத்தமிட்டது" என்ற பாடல் மலயமாருத ராகத்தில் இசைக்கப்பட்டுள்ளது.[6].அதே போல "கனவு ஒன்று" என்ற பாடல் ரேவதி ராகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[7] மேலும் "தலையைக் குனியும் தாமரையே" என்ற பாடல் ரீதிகவுளா ராகத்தின் அடிப்படையில் இசையமைக்கப்பட்டுள்ளது.[8]
மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia