இஷாந்த் ஷர்மா
இசாந்த் ஷர்மா (Ishant Sharma; (ⓘ; (பிறப்பு: செப்டம்பர் 2 1988) இந்தியத் துடுப்பாட்ட அணி வீரர் ஆவார். இவர் இந்திய அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20 ஆகிய அனைத்து வடிவ துடுப்பாட்டங்களிலும் விளையாடி வருகிறார். இவர் ஒரு வலதுகை மித விரைவு வீச்சாளர் ஆவார்.[1] ஜவகல் ஸ்ரீநாத் திற்கு அடுத்தபடியாக அதிவேகமான பந்தினை வீசியுள்ளார் (ஸ்ரீநாத்தின் சாதனை: 1999 உலகக்கோப்பையின் போது மணிக்கு 154.5 கி.மீ., இசாந்தின் வேகம்: 2008 ஆஸ்திரேலியா அடிலெய்டில் 152.6 km/h). இவர் 1.93 மீ (6.3 அடி) உயரம் கொண்டவர் ஆவார்.[2][3][4] 2006–2007 ஆம் ஆண்டில் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பு பெற்றார்.[5] அப்போது இவரின் வயது 18. இவரின் உடல்வாகினால் இவர் லம்பு எனும் புனைபெயர் கொண்டு அழைக்கப்பட்டார்.[6][7]. 2001 ஆம் ஆண்டில் தேர்வுத் துடுப்பாட்டங்களில் மிக இளம்வயதில் 100 இலக்குகளை வீழ்த்தி சாதனை படைத்தார். 2013 ஆம் ஆண்டில் தென்னப்பிரிக்கத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 100 வது இலக்கினை வீழ்த்தினார். இதன்மூலம் விரைவாக 100 இலக்குகளை வீழ்த்திய இந்தியர்களின் வரிசையில் ஐந்தாவது இடம்பிடித்தார்.[8] 2011 பொக்சிங் நாள் அன்று ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணியின் ரிக்கி பாண்டிங்கிற்கு மணிக்கு 152.2 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசினார். சிறந்த இந்தியப் பந்துவீச்சாளர்களில் விரைவு வீச்சாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். சர்வதேச போட்டிகள்மே, 2007 ஆம் ஆண்டில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தில் அறிமுகமானார். முனாஃவ் பட்டேல் காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் இரண்டாவது போட்டியில் மூன்று ஓவர்கள் வீசினார். அதில் ஐந்து ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஒரு ஓவரை மெய்டனாக வீசினார்.இலக்குகளை வீழ்த்தவில்லை.[9] பின் சூலை-ஆகஸ்டு , 2007 ஆம் ஆண்டில் இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். டிசம்பர் 2007 இல் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் முன்னணிப் பந்துவீச்சாளர்களான ஜாகிர் கான், சிறிசாந்த் மற்றும் ஆர் பி சிங் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு விளையாடும் அணியில் இடம் கிடைத்தது. பெங்களூரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 5 இலக்குகளை வீழ்த்தினார்.[10][11] இந்தத் தொடரின் இவரின் சிறப்பான செயல்பாட்டினால் ஆத்திரேலியச் சுற்றுப் பயணத்தில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். காயம் காரணமாக ஓய்வுபெற்ற ஜாகிர் கான், சிறிசாந்த் மற்றும் ஆர் பி சிங் ஆகியோர் பார்டர் கவாஸ்கர் கோப்பையில் அணி திரும்பினர். எனவே ஆத்திரேலியச் சுற்றுப் பயணத்தில் விளையாடும் அணியில் இவரது பெயர் இடம்பெறவில்லை. பின் ஜாகிர் கானுக்கு காயம் ஏற்படவே இரண்டாவது போட்டியில் விளையாடுவதற்காக மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார். சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். மூன்றாவது போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி ரிக்கி பாண்டிங்கின் இலக்கினை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார்.[12] பின் அடிலெய்டு நீள்வட்ட அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் சிறப்பாக பந்துவீசி இரண்டு இலக்குகளை கைப்பற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்தத் தொடரின் முடிவில் 358 ஓட்டங்கள் கொடுத்து 6 இலக்குகளை வீழ்த்தினார். இவரின் பந்துவீச்சு சராசரி 59.66 ஆகவும் ஸ்ட்ரைக் ரேட் 101.0 ஆகவும் இருந்தது.[13] சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia