கேதர் ஜாதவ்
கேதர் மகாதேவ் ஜாதவ் (Kedar Mahadev Jadhav (பிறப்பு: 26 மார்ச், 1985) என்பவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் மகாராட்டிர அணிக்காக உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடினார். இவர் துடுப்பாட்டப் போட்டிகளில் சகலத் துறையர் ஆவார். இவர் வலது கை மட்டையாளர் மற்றும் வலதுகை சுழற்பந்து வீச்சாளர். இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். நவம்பர் 16, 2014 ஆம் ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தில் அறிமுகம் ஆனார். மேலும் சூலை 17, 2015 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகம் ஆனார்.[1] ஆரம்பகால வாழ்க்கைகேதர் ஜாதவ் மார்ச் 26, 1985 இல் புனேயில் ஒரு நடுத்தரவர்க்க குடும்பத்தில் பிறந்தார். சோலாப்பூர் மாவட்டத்தில் வளர்ந்தார்.[2] இவரின் தந்தை மகாதேவ் ஜாதவ் மகாராட்டிர மாநில மின்சார வாரியத்தில் ஊழியராக பணியாற்றினார். 2003 ஆம் ஆண்டில் இவர் ஓய்வு பெற்றார்.[3][4] இஅவ்ரின் பெற்றோருக்கு மொத்தம் நான்கு குழந்தைகள். கேதார் ஜாதவ் நான்காகவதாகப் பிறந்தார். இவரின் மூத்த சகோதரிகள் ஆங்கிலத்தில் மருத்துவர் பட்டமும், நிதியில் பிரிவில் முதுகலைப் பட்டம் மற்றும் பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றனர். ஆனால் கேதார் ஜாதவ் ஒன்பதாம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்தினார்.[2][3] ஜாதவ் புனேவில் உள்ள கோத்ரத்தில் வாழ்ந்து வந்தார்.[5] அந்த சமயத்தில் பி ஒய் சி ஜிம்கானா அகாதமியில் விளையாடி வந்தார்.[4][6] 2004 ஆம் ஆண்டில் பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான மகாராட்டிர அணியில் சேர்வதற்கு முன்பாக ரெயின்போ துடுப்பாட்ட சங்கம் சார்பாக டென்னிசு பந்து போட்டித் தொடர்களில் விளையாடிவந்தார்.[7] உள்ளூர் போட்டிகள்2012 இல் உத்தரப் பிரதேச துடுப்பாட்ட அணிக்கு எதிராக மகாராட்டிரம் துடுப்பாட்ட சங்க மைதானத்தில் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை போட்டியில் மகாராட்டிர துடுப்பாட்ட அணியில் விளையாடினார். இந்தப்போட்டியில் 327 ஓட்டங்கள் பெற்றார்.மகாராட்டிர மட்டையாளர் ஒருவர் எடுக்கும் அதிகபட்ச ஓட்டங்கள் இதுவாகும். 2013--2014 ஆண்டு ரஞ்சிக் கோப்பை போட்டிகளின் நாயகராகத் திகழ்ந்தார். அந்த பருவத்தில் மட்டும் 1223 ஓட்டங்கள் பெற்றார். அதில் ஆறு நூறுகள் அடங்கும். அந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் எனும் சாதனை படைத்தார். மேலும் இதுவரை நடந்த ரஞ்சிக் கோப்பைப் போட்டிகளில் நான்காவது அதிகபட்ச ஓட்டங்கள் பெற்றவர் எனும் சாதனை படைத்தார். இவரின் பங்களிப்பின் மூலமாக 1992-1993 க்குப் பிறகு மகாராட்டிர துடுப்பாட்ட அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. மேலும் இந்திய துடுப்பாட்ட ஏ அணியில் இவர் இடம்பிடித்தார். சர்வதேச போட்டிகள்2014 ஆம் ஆண்டில்வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் அணியில் இடம் பிடித்தார். ஆனால் விளையாடும் அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதே ஆண்டில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரின் ஐந்தாவது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் முதன்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடினார். இந்தப் போட்டியில் 24 பந்துகளில் 20 ஓட்டங்களில் எடுத்து ஸ்டம்பிங் முறையில் அவுட் ஆனார். இந்தத் தொடரை இந்திய அணி 5-0 என முழுமையாக வென்றது. சூலை,2015 இல் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரில் ஹராரேவில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 87 பந்துகளில்105 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதே தொடரில் பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார்.
இந்தியன் பிரீமியர் லீக்கில் துவக்கத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியிலும் பின் 2010 ஆம் ஆண்சில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியிலும் விளாயாடினார். இவரின் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான அறிமுகப் போட்டியில் 29 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்தார். இதில்5 நான்குகள், 2 ஆறுகள் அடங்கும். அந்தப் போட்டியின் ஆட்ட நாயகன் விருது பெற்றார். அடித்த பருவகாலத்தில் கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா அணிக்காக விளையாடினார். அதில் மொத்தம் ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். 2014 இல் டெல்லி டேர்டெவில்ஸ் அணி இவரை ₹ 20 மில்லியன் மதிப்பில் இவரை ஏலத்தில் எடுத்தது. சான்றுகள்
வெளியிணைப்புகள்கிரிக்கின்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: கேதர் ஜாதவ்
|
Portal di Ensiklopedia Dunia