ஈராக் தற்போது 19 பிரதேசங்களைக் ( محافظةஅரபியில்muḥāfażah, குர்திஷ் மொழியில் parêzga ) கொண்டுள்ளது, இது "மாகாணங்கள்" என்றும் அழைக்கப்படுகிறது. ஈராக் அரசியலமைப்பின் படி, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாகாணங்கள் ஒன்று சேர்ந்து ஒரு தன்னாட்சி பிராந்தியத்தை உருவாக்கலாம்.[சான்று தேவை] பாக்தாத் மற்றும் பாஸ்ரா ஆகியவை ஈராக்கின் மிகப் பழமையான நிர்வாகப் பகுதிகளாகும். 2014 ஆம் ஆண்டில் சுலைமானியா மாகாணத்தின் ஹலாப்ஜா மாவட்டத்தைப் பிரித்து ஹலாப்ஜா மாகாணத்தை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. [1][2]
21 ஜனவரி 2014 அன்று, ஈராக் அரசாங்கத்தின் அமைச்சரவை மேலும் புதிய மாகாணங்களை உருவாக்கும் கொள்கை முடிவுக்கு ஒப்புதல் அளித்தது. [3] தற்போதைய நீனவா மாகாணம் மற்றும் சலாடின் மாகாணத்தில் இருந்து முறையே தால் அஃபர் மற்றும் துஸ் குர்மத்து ஆகிய இரண்டு புதிய மாகாணங்கள் உருவாக்கப்படும் என்று அவை அறிவித்தது. [4]அல் அன்பர் மாகாணத்தின் பல்லூஜா நகரம் ஒரு தனி மாகாணமாக மாற்றறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது, இது நகரத்தில் உருவான சுன்னி இஸ்லாமிய எழுச்சியினால் அறிவிக்கப்பட்டது.