தோஹுக் மாகாணம்
தோஹுக் கவர்னரேட் அல்லது தோஹுக் மாகாணம் (Dohuk Governorate,குர்தியம்: پارێزگای دھۆک ,Parêzgeha Dihokê;,[3][4] Syriac: ܗܘܦܪܟܝܐ ܕܢܘܗܕܪܐ, romanized: Hoparkiya d’Nohadra,[5] அரபி: محافظة دهوك, romanized: Muḥāfaẓat Dahūk) என்பது ஈராக்கின் தன்னாட்சிப் பகுதியான குர்திஸ்தானில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் தோஹுக் நகரம் ஆகும். இந்த மாகாணத்தின் சர்வதேச எல்லையாக துருக்கியின் அர்னாக் மாகாணத்தின் நுழைவாயிலாக இப்ராஹிம் கலீல் எல்லை வாயில், சிரியாவின் அல்-ஹசாகா மாகாணம் போன்றவை உள்ளன. 1976 க்கு முன்பு வரை, இது நீனவா மாகணத்தின் ஒரு பகுதியாக இருந்தது, இது மொசூல் மாகாணம் என்று அழைக்கப்பட்டது. தோஹுக் மாகாணத்தில் குர்துகள் மற்றும் அசீரியர்கள் வசிக்கின்றனர். 2018 ஆண்டைய கணக்கெடுப்பின்படி மாகாணத்தின் மக்கள் தொகை 1,292,535 ஆகும். அரசு
மாவட்டங்கள்![]() தோஹுக் மாகாணமானது ஏழு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் நான்கு மாவட்டங்கள் அதிகாரப்பூர்வமாக குர்திஸ்தான் தன்னாட்சிப் பகுதியின் ஒரு பகுதியாக உள்ளன. மேலும் மூன்று மாவட்டங்களும் நடைமுறையில் குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன:
கிராமங்களும், நகரங்களும்
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia