தியாலா மாகாணம்தியாலா கவர்னரேட் ( அரபி: محافظة ديالى Muḥāfaẓah Diyālā அல்லது தியாலா மாகாணம் என்பது கிழக்கு ஈராக்கில் உள்ள ஒரு கவர்னரேட் என்னும் மாகாணம் ஆகும். மாகாண அரசுஅவை
நிலவியல்தியாலா மாகாணமானது பாக்தாத்தின் வடகிழக்கில் ஈரானிய எல்லை வரை நீண்டுள்ளது. இதன் தலைநகரம் பாக்பா நகரமாகும். இது 17,685 சதுர கிலோமீட்டர் (6,828 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. டைக்ரிசு ஆற்றின் முக்கிய துணை ஆறான தியாலா ஆறானது மாகாணத்தின் பெரும்பகுதியில் பாய்கிறது. இரண்டு முக்கிய நீர் ஆதாரங்கள் அருகாமையில் இருப்பதால், தியாலாவின் முக்கிய தொழிலாக வேளாண்மை உள்ளது. இங்கு முதன்மையாக பேரீச்சையானது பெரிய தோப்புகளாக வளர்க்கப்படுகிறது. மேலும் மத்திய கிழக்கில் மிகப்பெரிய அளவில் ஆலிவ் தோப்புகளைக் கொண்டுள்ள பகுதியாகவும் இம்மாகாணம் உள்ளது.[3] மேலும் இது மத்திய கிழக்கில் ஆரஞ்சு தலைநகராகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஹம்ரின் மலைகள் மாகாணம் வழியாக செல்கின்றது. மக்கள் தொகை2003 ஆம் ஆண்டு ஈராக் மீதான கூட்டணி படையெடுப்பு மற்றும் சதாம் உசேனின் சுன்னி இசுலாம் அரபு அரசாங்கத்தை பாக்தாத்தில் இருந்து அகற்றியதில் இந்த மாகாணத்தின் மக்களின் இன அமைப்பானது ஒரு பெரிய பாத்திரம் வகித்தது. அந்த அரசாங்கமும் அதற்கு முந்தைய ஆட்சியாளர்கள் அனைவரும் சுன்னி அரேபியர்களாக இருந்தனர். மேலும் ஆட்சியாளர்கள் சியா மக்கள், குர்து மக்கள் மற்றும் ஈராக்கிய துர்க்மென் மக்கள் போன்ற பிற இன சிறுபான்மையினர் சுரண்டப்பட்டு சுன்னி அரபு நலன்களுக்கு ஆதரவாக இருந்தனர். இந்த நிலை 2003 முதல் வெகுவாக மாறியது, சுன்னி அரேபியர்கள் மாகாணம் முழுவதும் மிரட்டலுக்கு ஆளாகி வெளியேற்றத்திற்கு உள்ளாயினர். தற்போது, இந்த மாகாணத்தில் சுமார் 1,224,000 மக்கள் வசிக்கின்றனர். ஒரு காலத்தில் 2003 வரை பெரும் வலிமை கொண்டவர்களாக இருந்த சுன்னி அரேபியர்கள் ஈராக் உள்நாட்டுப் போரின் வன்முறை (2006–07) மற்றும் 2014 ஆம் ஆண்டு கோடையில் இருந்து, இசுலாமிய அரசு வீழ்ச்சிக்குப் பின்னர் மீண்டும் எழுந்த பாத் இயக்கம் காரணமாக தங்கள் பதவிகளை இழந்து வருகின்றனர். கிட்டத்தட்ட சுன்னி அரபு மக்கள் மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். தற்போது, அவர்கள் தியாலா கவர்னரேட்டின் மக்கள் தொகையில் 25 சதவீதத்திற்கு மேல் இல்லை. இதற்கு நேர்மாறாக, பாக்தாத்தில் இருந்த பல்வேறு சுன்னி அரபு அரசாங்கங்களால் 1960 முதல் 1990 வரை இந்த பகுதியில் இருந்து நாடு கடத்தப்பட்ட ஃபெய்லி குர்துகள் திரும்பி வருகிறார்கள். அவர்கள் இப்போது முழு கானாகின் மாவட்டத்திலும் இந்த மாகாணத்தின் எல்லையில் உள்ள மற்ற அனைத்து பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்துகின்றனர். சதாம் உசேனின் ஆட்சியின் போது ஒரு கட்டத்தில், அவர்களின் எண்ணிக்கை மொத்தம் வெறும் 7% ஆகக் குறைந்துவிட்டது. இன்று, அவர்கள் ஜலூலா / ஜலவ்லா மற்றும் அல்-சதியா போன்ற இடங்களில் உள்ள தங்கள் பழைய வீடுகளுக்கு திரும்பியதால் சுமார் 30% வரை அதிகரித்து வருவதாக பெருமிதங்கொள்கின்றனர். மீதமுள்ள குடியிருப்பாளர்களாக ஈராக்கிய சுன்னி துர்க்மென் (சுமார் 5%) மக்கள் முக்கியமாக கிஃப்ரியில் உள்ளனர், ஆனால் ஜலாவ்லா, அல்-சாதியா, மிக்தாடியா மற்றும் பிற சிறிய பகுதிகளில் மாகாணத்தைச் சுற்றி சிதறிக்கிடக்கின்றனர். நிர்வாக மாவட்டங்கள்தியாலா கவர்னரேட் ஆறு மாவட்டங்களை கொண்டுள்ளது. அவற்றின் பகுதிகளும் [4] 2003 இல் மதிப்பிடப்பட்ட மக்கள்தொகையுடன் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:[5]
குறிப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia