உதம்பூர் மக்களவைத் தொகுதி (Udhampur Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் சம்மு காசுமீரில் உள்ள ஆறு இந்திய நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி 20,230 சதுர கிலோமீட்டர் மலைப்பாங்கான இமயமலை நிலப்பரப்பை உள்ளடக்கியது. இது இசுரேலின் அளவுடன் ஒப்பிடத்தக்கது. இது கிஷ்துவார், இராம்பன், கதுவா, தோடா, ரியாசி மற்றும் உதம்பூர் மாவட்டங்களை உள்ளடக்கியது. உதம்பூர் மக்களவைத் தொகுதியின் மக்கள் தொகை 24,00,000க்கு மேல் உள்ளது. மேலும் இது நியூ மெக்சிகோவின் மக்கள் தொகையை விட அதிகமாக உள்ளது. 1967 முதல் 1980 வரை இத்தொகுதியின் மக்களவை உறுப்பினராகக் கரண் சிங் இருந்தார்.
சட்டமன்றத் தொகுதிகள்
2022ஆம் ஆண்டில் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சம்மு காசுமீரில் உள்ள உதம்பூர் மக்களவைக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல் பின்வருமாறு.[2][3][4]