உயர்ந்த உள்ளம்
உயர்ந்த உள்ளம் (Uyarndha Ullam) 1985 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எஸ். பி. முத்துராமனின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அம்பிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். வாலி, வைரமுத்து ஆகியோரின் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பஞ்சு அருணாசலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருந்தார்.[1] கதைகதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன. ஆனந்த் மிகப்பெரிய பணக்காரர். கவலையே தெரியாமல், குடிப்பது, சீட்டாடுவது, நண்பர்களுக்கு உதவுவது என்றிருப்பார் ஆனந்த். அவரின் இரக்க குணத்தையும் ஏமாளித்தனத்தையும் புரிந்துகொண்டு, அவரிடம் வேலையாளாகவும் நண்பனாகவும் மாறி, அவரிடம் இருந்து பணத்தை அபகரிப்பார் செல்வம். செலவுக்கு மேல் செலவு செய்து வந்ததாலும் நண்பர்களிடம் சீட்டாடி ஏமாந்ததாலும் ஓட்டாண்டியாகிவிடுவார் ஆனந்த். இந்த நிலையில், வீட்டு வேலைக்காரர் நாகபிள்ளையின் உறவுப் பெண் கீதா மீது காதல். சொத்துகளை இழந்து, வீடு வாசலை இழந்து, நாகபிள்ளையின் குடிசையில் அடைக்கலமாவார். பின்னர், கீதாவின் உதவியுடன் ஆட்டோ ஓட்டுவார். தான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவளுக்கு புற்றுநோய் என்று சொல்லி ஆனந்திடம் பணம் பறித்திருப்பார் செல்வம். இறுதியில், அந்தப் பெண்ணை செல்வம் உடன் சேர்த்துவைப்பார், இந்த மோசமான உலகையும் புரிந்துகொள்வார், உள்ளத்தில் உயர்ந்து நிற்கும் ஆனந்தை எல்லோரும் வியந்து பாராட்டுவார்கள் என்பதுடன் நிறைவடைகிறது. நடிகர்கள்
பாடல்கள்இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[2][3].
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia