ஆடு புலி ஆட்டம் (திரைப்படம்)
ஆடு புலி ஆட்டம் (Aadu Puli Attam) 1977 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா, ரசினிகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1] இத்திரைப்படம் தெலுங்கு மொழியில் 'எத்துக்கு பை எத்து' எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது. அல்லு ராமலிங்கம் மற்றும் கைகால சத்யநாராயணா நடிப்பில் சில காட்சிகள் இத்திரைப்படத்தில் இணைக்கப்பட்டு பின் தெலுங்கில் வெளியானது. நடிகர்கள்
தயாரிப்புஇப்படத்திற்கு கதை மற்றும் வசனம் இயக்குநர் மகேந்திரன் எழுதியுள்ளார்.[3] 'உறவே புதுமை நினைவே இளமை' என்ற பாடல் குன்றத்தூர், திருநீர்மலை போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. சாந்தி நாராயணன் தயாரித்த இத்திரைப்படம் வெற்றியடைந்தது.[4] பாடல்கள்இசையமைப்பாளர் விஜய பாஸ்கர் படத்திற்கு இசையமைத்தார்.[5][6] கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், மற்றும் பூவை செங்குட்டுவன் ஆகியோர் பாடல் வரிகளை எழுதினர்.[5][6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia