எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்
பல்தசாரே கோசா (c. 1370 – 22 டிசம்பர் 1419) என்பவர் இருபத்திமூன்றாம் யோவான் என்னும் பெயரினை ஏற்று மேற்கு சமயப்பிளவின் போது பீசாவிலிருந்து திருத்தந்தை பதவிக்கு உரிமை கொண்டாடியவர்களுள் ஒருவர் ஆவர். கத்தோலிக்க திருச்சபையில் இவர் எதிர்-திருத்தந்தை எனக்கருதப்படுகின்றார். பொலோக்னாவின் சட்ட முனைவர் பட்டம் பெற்றப்பின்பு, மேற்கு சமயப்பிளவின்போது உரோமைச்செயலகத்தில் பணி புரிந்தார். திருத்தந்தை ஒன்பதாம் போனிஃபாஸ் 1402 இல் இவரை கர்தினாலாக உயர்த்தினார். 1403 முதல் 1408 வரை இவர் பொலோக்னாவுக்கான திருப்பீடத்தூதுவராகப்பணியாற்றினார்.[1] மேற்கு சமயப்பிளவுக்கு முடிவுகான 1408இல் இவர் பன்னிரண்டாம் கிரகோரியினை விட்டுப்பிரிந்து பீசா பொதுச்சங்கத்தில் கலந்து கொண்டார். அச்சங்கம் ஐந்தாம் அலெக்சாண்டரை திருத்தந்தையாக தேர்வு செய்தது.. மே 1410இல் ஐந்தாம் அலெக்சாண்டர் இறக்கவே மே 25 இவர் திருத்தந்தையாக தேர்வானார். மேற்கு சமயப்பிளவுக்கு முடிவுகான காண்ஸ்தான்சு பொதுச்சங்கம் நவம்பர் 5, 1414இல் கூடியது. இதன் இரண்டாம் அமர்வில் இது உரோமையின் திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரியின் ஒப்புதலைப்பெற்றது. இதல் மூன்று திருத்தந்தையரும் தானாக பணி துறக்கக் கோரப்பட்டது. முதலில் இதற்கு இருபத்திமூன்றாம் யோவான் ஒப்புக்கொள்ள மறுத்தாலும், பின்னர் பிற திருத்தந்தையரும் பதவி விலகினால், தாமும் விலகுவதாக மார்ச் 2, 1415 அன்று அறிவித்தார். எனினும் மார்ச் 20 அன்று சங்கத்திலிருந்து தப்ப முயன்ற இவரை கைது செய்து இவரிடமிருந்து பதவி துறப்பு பெறப்பட்டது. திருத்தந்தை பன்னிரண்டாம் கிரகோரியின் பதிள் ஆள் அவரின் பணிதுறப்புக்கடிதத்தை சங்கத்தினர்முன் வாசித்தார். அவிஞ்ஞோனின் பதின்மூன்றாம் பெனடிக்ட் இச்சங்கத்தின் முடிவை ஏற்காததால் அவர் திருச்சபையினை விட்டு விலக்கப்பட்டார். இதன்பின்பு திருத்தந்தை ஐந்தாம் மார்ட்டின் திருத்தந்தையாக தேர்வானார். இது இச்சிக்கலுக்கு முடிவாக அமைந்தது. இருபத்திமூன்றாம் யோவான் ஐந்தாம் மார்ட்டினின் தேர்வை ஒப்புக்கொன்டாலும், அவர் கைதியாக இருந்தார். 1418இல் பிணைத்தொகை செலுத்தி விடுதலையானார். 1419இல் இவர் துஸ்குலுமின் கர்தினால் ஆயராக்கப்பட்டார். இதன் பின்பு சிலமாதங்களில் இவர் இறந்தார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia