எலுமிச்சை ஊசிமல்லி
எலுமிச்சை ஊசிமல்லி (தாவரவியல் பெயர்: Jasminum azoricum, யாசுமினம் அசோரிகம், ஆங்கிலம்: lemon-scented jasmine) என்பது பூக்கும் தாவரங்களிலுள்ள ஒருஇனமாகும். இத்தாவரத்தின் குடும்பம், முல்லைக் குடும்பம் ஆகும். இவ்வினம் மாறாப் பசுமையுள்ள கொடி ஆகும். இதன் தாயகம் மதீரா ஆகும்.[2] இதன் இலையமைவு கூட்டிலையாகும். இக்கூட்டிலையில் மூன்று இலைகள் உள்ளன.[2] இதன் பூக்கள் மணமுள்ளதாகவும் வெள்ளை நிறமுள்ளதாகவும், நட்சத்திர வடிவமுள்ளதாகவும், அவைகள் கூட்டுப் பூத்திரள் வடிவத்திலும் இருக்கின்றன. இத்திரளானது இலைக் கோணத்தில் இருந்து, வெயிற்காலத்தில் தோன்றுகிறது. இவ்வாறு தோன்றும் பூ மொட்டுகள், அடர்ந்த சிவப்பாக தோன்றுகிறது. பிறகே வெள்ளை நிற பூத்திரளாக மாறுகிறது.[2] மிகுந்த குளிரையும் தாங்கும் திறன் கொண்டதாக உள்ளது.[3][4] பேரினச்சொல்லின் தோற்றம்அரபி மொழியில், யாச(அ)மின் (ياسمين), என்றும்; இந்த அரபிச்சொல்லுக்கு "இனிய நுறுமணமுள்ள தாவரங்கள்" என்பது பொருளாகும்.[5] பாரசீக மொழியில் யாசுசுமின் (یاسمین) என்றும்; உருது மொழியில் یاسمینی அல்லது یاسمین بو என்றும் அழைப்பர். மேலும், மல்லிப்பூவின் வாசனை எண்ணெக்கான பெயர்கள், சில கிரேக்க சொற்களோடு (iasme, iasmelaion) ஒப்பீடும் செய்யப்படுகிறது. 1570 ஆம் ஆண்டுகளில், பிரஞ்சு மொழியில் jasmin என்ற சொல்லும், அதற்கு முன்னர் jessemin என்ற சொல்லும் பயன்பாட்டில் இருந்துள்ளன. பிரஞ்சு மொழியில் இருந்து, பல செருமானிய மொழிகளில் இச்சொல்லின் வேறுபட்ட வடிவங்கள் தோன்றியது எனலாம். பதினாறாம் நூற்றாண்டில் இத்தாவர வகை இங்கிலாந்தில் முதன்முதலாக வளர்க்கப்பட்டதாக அறிய முடிகிறது.[6] இவற்றையும் காண்கமேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia