ஐசக் தாமஸ் கொட்டுகப்பள்ளி
ஐசக் தாமஸ் கொட்டுகப்பள்ளி ( c. 1948 [1] - 18 பிப்ரவரி 2021 [2] ) என்பவர் ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். இவர் இசை அமைப்பாளர் மற்றும் திரைக்கதை எழுத்தாளராக, முதன்மையாக மலையாளம், கன்னடம், இந்தி படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் பல ஆங்கில ஆவணப்படங்கள் மற்றும் விளம்பரங்களுக்கு இசை அமைத்துள்ளார். கிரிஷ் காசரவள்ளி இயக்கி தேசிய விருது பெற்ற கன்னடத் திரைப்படமான தாயி சாஹீப (1997) மூலம் ஐசக் திரைப்படத் துறையில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆதாமிண்டெ மகன் அபூ (2010) திரைப்படத்தில் இவரது பின்னணி இசைக்காக, 58 வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த இசை அமைப்பாளர் விருதை வென்றார். இது தவிர, பல்வேறு மலையாள படங்களில் இசையமைத்தற்காக ஐந்து முறை கேரள மாநில திரைப்பட விருதுகளை வென்றார்.[3] ஆரம்ப கால வாழ்க்கைஐசக் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜார்ஜ் தாமஸ் கொட்டுகப்பள்ளியின் மகனும், கேரளத்தின் பாலாவின் கொட்டுகப்பள்ளி குடும்ப உறுப்பினருமாவார். இவரது குழந்தை பருவத்திலிருந்தே கலை மற்றும் இசையில் ஈடுபாட்டுடன் இயங்கிவந்தார். பிஷப் காட்டன் பாய்ஸ் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பைச் மேற்கொண்டார். சி. ராமச்சந்திரா, பாம்பே ரவி, மதன் மோகன், எஸ். டி. பர்மன் போன்ற இசையமைப்பாளர்களின் படைப்புகள் மீதான இவரது மோகமே இவரை இசையமைப்பை நோக்கி உந்தியது. இவர் பாலே மற்றும் ஓபராக்களில் ஆர்வம் கொண்டிருந்தார், மேலும் திரைக்கதைகளையும் எழுதத் தொடங்கினார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றார். பின்னர் புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தில் (எஃப்.டி.ஐ.ஐ) சேர முடிவு செய்தார். திரைப்பட இயக்கம் மற்றும் திரைக்கதை எழுத்தில் முதுகலை பட்டயப் படிப்பை முடித்தார். பின்னர், அதற்குப் பின்னர் ஜி அரவிந்தனிடம் தம்பு (1978), கும்மட்டி (1979), எஸ்தப்பன் (1980) போன்ற படங்களில் உதவியாளராகப் பணியாற்றினார்.[4] தொழில்ஐசக் 1997 இல் வெளியான கன்னடத் திரைப்படமான தாயி சஹீபா படத்திற்கு இசையமைத்தார். இந்த படம் விமர்சகர்களால் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இசையும் பாராட்டப்பட்டது. இயக்குநர் கிரிஷ் காசரவள்ளியுடன் ஐசக் நீண்டகாலம் இணைந்து பணியாற்ற இது வழி வகுத்தது. அடுத்தடுத காசரவள்ளியின் படங்களான கிரௌரியா (1996), த்வீப (2002), நயீ நெரலு (2006), குலாபி டாக்கீஸ் (2008) போன்ற படங்களுக்கு இசை அமைத்தார்.[5] மலையாளத்தில், மார்கம், சஞ்சாரம், குட்டி ஸ்ராங்க், புண்யம் அஹம், ஆதாமிண்டெ மகன் அபூ போன்ற பல படங்களுக்கு இசையமைத்தார், மேலும் இவருக்கு கேரள மாநில விருதுகள் மற்றும் தேசிய திரைப்பட விருதுகள் கிடைத்தன. 1: 1.6 ஆன் ஓட் டு லாஸ்ட் லவ் (2004) படத்திற்கு இவர் அமைத்த இசையானது இந்திய சர்வதேச திரைப்பட விழா பனோரமாவில் பாராட்டப்பட்டது. இசைத்தொகுப்பு தரவுத்திரட்டு
விருதுகள் மற்றும் பரிந்துரைகள்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia