ஐதராபாத்து பிரியாணி
ஐதராபாத்து பிரியாணி (Hyderabadi biriyani) என்பது ஒரு பிரியாணி உணவு வகை ஆகும். இது பாசுமதி அரிசி மற்றும் செம்மறி ஆட்டுக் கறி ஆகியவை கொண்டு சமைக்கப்படுகிறது.[1] தற்போதைய ஆந்திரப் பிரதேசின் ஐதராபாத்து நகரம் ஐதராபாத் நிசாம்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த போது அவர்களது அரண்மனை சமையல் நிபுணர்களால் தயாரிக்கப்பட்டது..[2][3] ![]() சேர்மானப் பொருட்கள்பாசுமதி அரிசி, தயிர், வெங்காயம், எலுமிச்சை, கொத்தமல்லி, வாசனைப் பொருட்கள் மற்றும் இறைச்சியாக செம்மறியாடு அல்லது வெள்ளாடு அல்லது கோழி ஆகியவை.[1] வகைகள்ஐதராபாத்து பிரியாணி அதை தயாரிக்கும் முறையைக் கொண்டு இரண்டு வகையாகப் பிரிக்கப்படும். அவை, கச்சி பிரியாணி மற்றும் பாக்கி பிரியாணி ஆகியவை.[4] கச்சி பிரியாணிஇதில் இறைச்சியானது சேர்மானப் பொருட்களுடன் சேர்த்து கலக்கி இரவு முழுவதும் வைத்திருக்கப்படும். பின்னர் சமையலுக்கு முன்னர் தயிரோடு கலக்கி சேர்த்து வைத்து அதன் பின்னர் நீராவியில் சமைக்கப்படும்.[5] பாக்கி பிரியாணிஇதில் இறைச்சியானது சேர்மானப் பொருட்களுடன் சேர்ந்து இருக்கும் நேரம் குறைவானதாகும். மேலும் இறைச்சியானது பாசுமதி அரிசியை சமைக்கும் முன்னரே சமைக்கப்படும்.[6] இறைச்சிக்குப் பதிலாக காய்கறிகளைக் கொண்டும் இவ்வகை பிரியாணியைச் செய்யலாம். பொதுவாக இவ்வகை பிரியாணியோடு சேர்ந்து உண்ண தயிரில் வெங்காயம் சேர்த்த உணவைச் சேர்த்துக் கொள்வர். வெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia