ஒலகடம்
ஒலகடம் (ஆங்கிலம்:Olagadam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் பவானி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அமைவிடம்பவானியிலிருந்து வடக்கு திசையில் வெள்ளித் திருப்பூர் செல்லும் சாலையில் 18 வது கிலோ மீட்டரில் ஒலகடம் பேரூராட்சி அமைந்துள்ளது. இப்பேரூரட்சிக்கு ஈரோடு 36 கி.மீ.. உள்ளது இதன் கிழக்கில் அம்மாப்பேட்டை 17 கி.மீ..; மேற்கில் அந்தியூர் 8 கி.மீ..; வடக்கில் நெருஞ்சிப்பேட்டை 30 கி.மீ..; தெற்கில் ஜம்பை 18 கி.மீ.. தொலைவில் உள்ளது. பேரூராட்சியின் அமைப்பு15.56 ச.கி.மீ.. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 72 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பவானி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3] மக்கள் தொகை பரம்பல்2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,851 வீடுகளும், 9,958 மக்கள்தொகையும் கொண்டது. [4] ஆதாரங்கள்
|
Portal di Ensiklopedia Dunia