பவானிசாகர் (ஆங்கிலம் :Bhavanisagar ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில், சத்தியமங்கலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலும் இது பவானிசாகர் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இங்கு தமிழ்நாடு அரசு அலுவலர் பயிற்சி நிலையம் உள்ளது.[ 4] பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பவானிசாகர் அணையின் காரணமாக இவ்வூர் இப்பெயர் பெற்றது.
அமைவிடம்
பவானிசாகர் பேரூராட்சி, [[ஈரோடு|ஈரோட்டிலிருந்து 86 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் சத்தியமங்கலம் 15 கி.மீ.; மேற்கில் மேட்டுப்பாளையம் 36 கி.மீ.; வடக்கில் தாளவாடி 45 கி.மீ.; தெற்கில் புஞ்சைப் புளியம்பட்டி 16 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
5.83 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும்,83 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பவானிசாகர் (சட்டமன்றத் தொகுதி)க்கும் , நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[ 5]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,134 வீடுகளும், 7,710 மக்கள்தொகையும் கொண்டது.[ 6]
ஆதாரங்கள்
↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு" . tn.gov.in . தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015 .
↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு" . tn.gov.in . தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015 .
↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்" . tn.gov.in . தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015 .
↑ அரசு அலுவலர் பயிற்சி நிலையம்
↑ பவானிசாகர் பேரூராட்சியின் இணையதளம்
↑ Bhavanisagar Population Census 2011