ஓல்மியம் மற்றும் அயோடின் தனிமங்களை நேரடியாக வினைபுரியச் செய்து ஓல்மியம்(III) அயோடைடு தயாரிக்கப்படுகிறது:[4]
2 Ho + 3 I2 → 2 HoI3
ஓல்மியத்துடன் நேரடியாக பாதரச(II) அயோடைடு சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தும் ஓல்மியம்(III) அயோடைடு உருவாக்கப்படுகிறது.
2 Ho + 3 HgI2 → 2 HoI3 + 3 Hg
தயாரிப்பு வினையில் உருவாகும் பாதரசத்தை வடிகட்டுதல் மூலம் அகற்றலாம்.[5]
ஓல்மியம்(III) அயோடைடு நீரேற்றை அதிக அளவு அம்மோனியம் அயோடைடு சேர்த்து வினைபுரியச் செய்து, சேர்மத்தை நீராற்பகுப்புக்கு ஆளாக்கி நீர்நீக்கல் வினையின் மூலம் நீரற்ற வடிவமாக மாற்றலாம்.[4]
பண்புகள்
ஓல்மியம்(III) அயோடைடு அதிகமான அளவுக்கு நீருறிஞ்சும் தன்மை கொண்டுள்ளது. இது தண்ணீரில் கரையும். பிசுமத்(III) அயோடைடு சேர்மத்தின் கட்டமைப்பை ஒத்த மஞ்சள் நிற அறுகோணப் படிகங்களாக உருவாகிறது.[6][3][2] It forms yellow hexagonal crystals with a crystal structure similar to bismuth(III) iodide.[4] காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி எளிதில் நீரேற்றாக மாற்றமடையும். தொடர்புடைய ஆக்சைடு அயோடைடும் உயர்ந்த வெப்பநிலையில் உடனடியாக உருவாகிறது.[4]
மேற்கோள்கள்
↑Jantsch, G.; Jawurek, H.; Skalla, N.; Gawalowski, H. (1932). "Zur Kenntnis der Halogenide der seltenen Erden. VI. Über die Halogenide der Terbin- und Erbinerdengruppe". Zeitschrift für Anorganische und Allgemeine Chemie207 (4): 353–367. doi:10.1002/zaac.19322070404.