ஓல்மியம்(III) ஆக்சைடு
ஓல்மியம்(III) ஆக்சைடு (holmium(III) oxide) அல்லது ஓல்மியம் ஆக்சைடு (holmium oxide) என்பது புவியில் காணப்படும் மிக அரிதான ஓல்மியம் தனிமத்தையும், ஆக்சிசனையும் கொண்டுள்ள ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இதன் மூலக்கூற்று வாய்பாடு Ho2O3 ஆகும். ஓல்மியம் ஆக்சைடானது, டிசிப்ரோசியம் ஆக்சைடு (Dy2O3) உடன் இணையும்பொழுது சக்திவாய்ந்த பாராகாந்தப் பொருளாக அறியப்படுகிறது. ஓல்மியம் ஆக்சைடானது, எர்பியா என்றழைக்கப்படும் எர்பிய ஆக்சைடு தனிமங்களின் கூற்றாக ஏற்கப்படுகிறது. பொதுவாக இயற்கையில் மூவிணைதிறன் லாந்தனைடுகளின் ஆக்சைடுகள் ஒன்றாகவே கிடைக்கிறது, இதனைப் பிரிப்பதற்கு சிறப்பு வழிமுறைகள் தேவைப்படுகிறது. ஓல்மியம் ஆக்சைடு சிறப்பு வண்ணக் கண்ணாடிகள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. ஓல்மியம் ஆக்சைடு மற்றும் ஓல்மியம் ஆக்சைடு கரைசல் கொண்ட கண்ணாடி கண்ணுக்கு புலப்படும் நிறமாலை வரம்பில் தொடர்ச்சியாக ஏற்படும் கூர்மையான ஒளியியல் முகடுகளை உறிஞ்சுகிறது. எனவே, இது பாரம்பரியமாக ஒளியியல் நிறமாலைமானிகளில் அளவீடுகளின் பொழுது தரநிர்ணயமாக பயன்படுத்தப்படுகின்றன. ![]() சான்றுகள்
|
Portal di Ensiklopedia Dunia