ஓல்மியம் பாசுபைடு
ஓல்மியம் பாசுபைடு (Holmium phosphide) என்பது HoP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஓல்மியமும்ம் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2][3] இது தண்ணீரில் கரையாது. அடர் நிறத்தில் படிகங்களாக உருவாகும். தயாரிப்புவெற்றிடத்தில் அல்லது மந்த வாயுச் சூழலில் தூளாக்கப்பட்ட ஓல்மியத்தையும் சிவப்பு பாசுபரசையும் சேர்த்து சூடாக்கினால் ஓல்மியம் பாசுபைடு உருவாகிறது. இயற்பியல் பண்புகள்ஓல்மியம் பாசுபைடு கனசதுர வடிவத்தில் அடர்நிறப் படிகங்களாக உருவாகிறது. காற்றில் நிலைப்புத்தன்மை கொண்ட இது நீரில் கரையாது. சோடியம் குளோரைடு கட்டமைப்பில் உள்ள மோனோநிக்டைடு என்ற அரிய வகை சேர்மங்களுடன் இது வகைப்படுத்தப்படுகிறது.[4] தாழ்வெப்பநிலைகளில் ஓல்மியம் பாசுபைடு அயக் காந்தப் பண்புடன் காணப்படுகிறது.[5][6] வேதியியல் பண்புகள்நைட்ரிக் அமிலத்துடன் ஓல்மியம் பாசுபைடு தீவிரமாக வினைபுரிகிறது. பயன்கள்உயர் ஆற்றல் நிலை, உயர் அலைவரிசை பயன்பாடுகள், சீரொளி மற்றும் இதர ஒளியியல் இருமுனையங்களில் பிசுமத் பாசுபைடு ஒரு குறைக்கடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.[3] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia