கணிதக் கலைச்சொற்கள் (ஆங்கில அகர வரிசையில்)
ஒரு வேண்டுகோள்: இக் கணிதக் கலைச்சொற்கள் பட்டியலில் திருத்தம் செய்யும் த.வி. பயனர்கள் தயவு செய்து அதற்கு ஒத்த திருத்தங்களை கணிதக் கலைச்சொற்கள் (தமிழ் அகர வரிசையில்) பட்டியலிலும் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். A
BBanach Space பானக் வெளி Base of Logarithm மடக்கையின் அடி Basis (of Space) அடுக்களம் Bicentric quadrilateral இரு மைய நாற்கரம் Bijection இருவழிக்கோப்பு Binary Operation ஈருறுப்புச் செயல், ஈருறுப்புச் செயலி Binomial Theorem ஈருறுப்புத்தேற்றம் Biquadratic Equation நாற்படியச்சமன்பாடு; நாற்படிச்சமன்பாடு
Black hole கருங்குழி; கருந்துளை Boolean Algebra பூலியன் இயற்கணிதம் CCalculus நுண்கணிதம்
Cardinal Number எண்ணிக்கை அளவை; எண்ணளவை
Case வகை, பட்சம் Category theory வகுதிக்கோட்பாடு Celestial equator வான நடுவரை
Characteristic பண்பு Cluster கூட்டம் Coarser Topology சிறிய இடவியற்கூறு Codomain இணையாட்களம் Coefficient கெழு Cofactor இணைக்காரணி, துணைக்காரணி Column (of matrix) (அணியின்) நிரல்
Combination சேர்வு
Commutative பரிமாற்று
Compass கவராயம் Compatibility ஒத்துப்போதல் Complete Graph முழுக்கோலம் Complex number சிக்கலெண், பலக்கெண், (செறிவெண்), கலப்பெண்
Composite number பகு எண் Composition சேர்வை Concave குழிவான
Condition நிபந்தனை Conduction கடத்தல் Congruence modulo n முற்றிசைவு மாடுலோ n, சமானம் மாடுலோ n Conjecture யூகம் Conjugate of complex number துணைச்சிக்கலெண், இணைச்சிக்கலெண்
Conjugate (element of Group) இணை இயம்
Consistency அவிரோதம் Constant நிலைப்பி, மாறிலி, மாறா எண் Continued Fraction தொடரும் பின்னம் Continuous தொடர்
Continuum Hypothesis தொடரகக் கருதுகோள் Contradiction முரண்பாடு Convergence ஒருங்கல்
Converse மாற்றுத்தேற்றம், மறுதலை Convex குவிந்த
Coordinate ஆயம்
Coprime பரஸ்பரப்பகாதனி; ஒன்றுக்கொன்று பகாதனி Corollary கிளைத்தேற்றம் Correlation நேர் இணைவினை (பரஸ்பர இணைவினை) Correlation (Time Series correlation) காலதொடர் இணைவினை Corr; Regression Coefficient நிபந்தனை இணைவினை நிகழ்தகவு எண் Cosmology அண்டவியல்
Countability எண்ணுறுமை
Counter-example மாற்றுக்காட்டு; மாற்று எடுத்துக்காட்டு Cubic முப்படியம்
Curve வளைவரை, வரைவு Cycle சுழல்
Cyclic Group சுழற்குலம்
DDatum, Data தரவு, தரவுகள் Declination நடுவரை விலக்கம் Definition வரையறை Degree சுழியளவு, பாகை Density அடர்த்தி Depressed Cubic குறைக்கப்பட்ட முப்படியம் Derivative வகைக்கெழு Design திட்டம் Determinant அணிக்கோவை Differential Equation வகையீட்டுச்சமன்பாடு
Dimension பரிமாணம் Discrete Mathematics தனிச்செயலிக்கணிதம் Discrete Topology தன்னிலை இடவியற்கூறு Discriminant பண்புகாட்டி Disjoint cycle வெட்டாத சுழல் Distribution Theory பரவல் கோட்பாடு Distributivity பங்கீட்டுப் பண்பு Diurnal motion நாளியக்கம் Division Ring பரிமாறாக்களம் Divisor வகுக்குமெண், காரணி Domain ஆட்களம் Dot Product புள்ளிப்பெருக்கல், புள்ளிப்பெருக்கீடு Dynamics இயக்கவியல் EEigenvalue ஐகென் மதிப்பு Electromagnetic field மின்காந்தக்களம் Electron எதிர்மின்னி, இலத்திரன் Element (of a set) (கணத்தின்) உறுப்பு Ellipse நீள்வட்டம்
Empty Set வெற்றுக்கணம் Endomorphism உள் அமைவியம் Energy ஆற்றல் Epimorphism வெளி அமைவியம் Equation சமன்பாடு Equator நடுவரை
Equivalence சமானம்
Essential அடிக்கூறு
Euclidean Geometry யூகிளிட் வடிவியல் Evaluation கணித்தல் Even number இரட்டைப்படை எண் Event horizon இலக்கு ரேகை Existence இருப்பு
Exotic 4-dimensional Manifolds அற்புத 4-பரிமாணப் பன்மடிகள் Expansion விரிவாக்கம் Exponential (number) அடுக்குமாறிலி
Expression கோவை Extreme, Extremal புறக்கோடி FFactorial காரணியம்
Fermat Prime ஃபெர்மா பகாதனி
Fibre (or) Fiber நார் Finite Field முடிவுறு களம் Field களம் Finer Topology பெரிய இடவியற்கூறு Fission பிளவு Force விசை Formula வாய்பாடு Foundations of Mathematics கணிதத்தின் அடித்தளங்கள்
Fourier Series ஃபொரியர் தொடர் Four-square Theorem நான்கு வர்க்கத் தேற்றம் Function சார்பு
Fundamental Theorem of Algebra இயற்கணிதத்தின் அடிப்படைத்தேற்றம் Fusion இணைவு GG.C.F. (Greatest Common Factor) உ.பொ.கா. (உத்தமப்பொதுக் காரணி) Gaussian Integer காஸ் முழு எண் General Linear Group பொது நேரியற்குலம் General Relativity பொதுச்சார்பியல் Generalisation நுண்பியலாக்கம்; பொதுமையாக்கம் Generator பிறப்பி Geodesy புவிப்பரப்பு
Geometric Progression பெருக்குத்தொடர்
Graph Theory கோலக்கோட்பாடு Gravity (புவி) ஈர்ப்பு, நிறை ஈர்ப்பு
Great circle பெருவட்டம் Group குலம்
Growth வளர்வு
HHarmonic Analysis இசைப்பகுவியல் Harmonic Integral இசைத்தொகையீடு
Heat வெப்பம் Hermitian Form ஹெர்மைட் அமைப்பு Hilbert Space ஹில்பர்ட் வெளி Homeomorphism முழுமைத் தொடரமைவியம், முழுமைத்தொடரமைவு Homogeneous Homology அமைப்பு ஒப்பு
Homomorphic காப்பமைவியம் உள்ள
Homotopy அமைப்பு ஒத்து Horizon தொடுவானம் Horizontal line கிடைக்கோடு Hyperbola மிகைபரவளையம், மிகைவளையம்
Hypergeometric Function மிகைபெருக்கச்சார்பு
Hypothesis கருதுகோள் IIdeal சீர்மம் Identity (Relation, equation) முற்றொருமைச்சமன்பாடு
Image எதிருரு, பிம்பம் Imaginary number கற்பனை எண், அமைகண எண் Indeterminate Equations தேரவியலா சமன்பாடுகள் Indicator function சுட்டுச் சார்பு, சுட்டும் சார்பு Induction உய்த்தறிதல் Infinite Field முடிவுறாக்களம்
Infinitesimal நுண்ணளவு Injection உள்ளிடு கோப்பு
Inner Product உட்பெருக்கு Integer முழு எண்
Integral (n) தொகையீடு
International Mathematical Congress பன்னாட்டுக்கணித காங்கிரஸ் Interpolation இடைச்செறுகல் Intersection வெட்டு Into map உட்கோப்பு Invariance மாற்றமுறாமை; மாறாமி
Inverse நேர்மாறு, மாற்றுறுப்பு
Irrational Number விகிதமுறா எண் Isometric சம அளவையுடைய
Isomorphism சம அமைவியம்; (ஓருரு அமைவு)
KKernel உட்கரு, சுழிவு LL.C.M (Least common Multiple) அ.பொ.ம. (அதமப் பொது மடங்கு) Large Deviation பெரிய விலக்கம் Latitude அகலாங்கு Lattice Theory கூடமைப்புக்கோட்பாடு Lemma கொற்கோள் Lie Algebra லீ இயற்கணிதம்
Limit எல்லை
Linear Algebra நேரியல் இயற்கணிதம்
Logarithm மடக்கை
Logic தர்க்க நியாயம் Longitude நீளாங்கு Loss of generality பொதுத்தன்மைக்குக் குந்தகம் Low-dimensional Manifolds சிறு பரிமாண பன்மடிகள் MMagic Square விந்தைச்சதுரம்/மாயச் சதுரம் Magnitude (of star) ஒளிப்பொலிவு Manifold பன்மடிவெளி Map, Mapping கோப்பு Mass திணிவு Mathematician கணித இயலர், கணிதவியலர், கணிதவியலாளர் Matrix அணி
Maximal Ideal உச்சநிலைச்சீர்மம் Maximum Value பெரும மதிப்பு Measure and Integration அளவையும் தொகையீடும் Mechanics நிலையியக்கவியல் Memoir ஆய்வுநூல் Meridian உச்சிவட்டம் Method of Exhaustionவெளிப்படுத்துகை முறை Metric Space தொலைவு வெளி
Minimum Value சிறும மதிப்பு Modern Algebra தற்கால இயற்கணிதம்
Modular Arithmetic மாடுலோ எண்கணிதம், மட்டு எண்கணிதம் Module கலம் Modulus மட்டு Monochromatic ஒரேநிறமுடைய Monomorphism ஒன்றமைவியம் Morphism அமைவியம், அமைவு Multilinear பல்லுறுப்பு நேரியல் Multinomial Coefficient பல்லுறுப்புக்கெழு Multiplicative Inverse பெருக்கல் நேர்மாறு Multivariate Calculus பன்மாறி நுண்கணிதம்
NNatural Logarithm இயல் மடக்கை
Negative எதிர்மம், எதிர்மாறு Neighbourhood அண்மை Non-associative ring சேர்ப்பற்ற வளையம், ஒட்டுறவற்ற வளையம் Non-commutative பரிமாற்றலற்ற
Non-euclidean geometry யூக்ளிடற்ற வடிவியல்
Non-singular matrix வழுவிலா அணி Non-trivial வெற்றல்லாத Norm நெறிமம் Notation குறியீட்டுமுறை Nucleus அணுக்கரு Null-space சுழிவு, உட்கரு Nullity சுழிவளவை Number எண்
Numeral எண்ணுரு OObject பொருள் Observable நோக்கத்தகு கணியம்
Odd number ஒற்றைப்படை எண் One-one correspondence ஒன்றுக்கொன்றான இயைபு
Onto map முழுக்கோப்பு Open interval திறந்த இடைவெளி
Operator செயலி
Orbit சுற்றுப்பாதை Order வரிசை, கிரமம்
Orientation திசைப்போக்கு Orthogonality செங்குத்துத்தன்மை
Orthonormal Basis செங்குத்தலகு அடுக்களம் PPair இரட்டை Parabola பரவளையம், பரவளைவு Parallelopiped இணைகரத்திண்மம் Parallel Postulate இணை அடிகோள், இணை முற்கோள் Parameter கணியம் Parent article தாய்க்கட்டுரை Particular case தனிக்குறிப்பு Partial Order பகுதி வரிசை Partition பிரிவினை Perfect number செவ்விய எண் Periodic ஆவர்த்தனமுள்ள
Permute திரி, வரிசைமாற்று
Photon ஒளியன் Pigeon-hole Principle புறாக்கூண்டு தத்துவம் Piecewise Function துண்டுவாரிச் சார்பு Place Value Notation இடமதிப்புக்குறியீடு Place-Value system இடமதிப்புத்திட்டம் Platonic Solids பிளேட்டோனிக் திண்மங்கள் Pointwise addition புள்ளிவழிக்கூட்டல்
Polya Enumeration Theorem போல்யா எண்ணெடுப்புத் தேற்றம் Polynomial பல்லுறுப்பு Positive நேர்மம் Power Set அடுக்கு கணம் Precision துல்லியம் Pre-image முன்னுரு Pressure அழுத்தம் Prime factor பகாக்காரணி
Primitive root ஏது மூலம் Probability நிகழ்தகவு Process செயல்முறை Proof நிறுவல் Proper subset தக்க உட்கணம் Property பண்பு Proportional விகிதசமம் Proof நிறுவல் Proper subset Pure Mathematics தன்னியற் கணிதம் QQuadratic இருபடிய, இருபடியம்
Quadrilateral நாற்கரம் Quantum Mechanics குவாண்டம் நிலையியக்கவியல் Quintic Equation ஐந்துபடிச்சமன்பாடு RRange வீச்சு Rank (of matrix) (அணியின்) அளவை Rational Number விகிதமுறு எண் (வகுனி எண்) Real Line மெய்யெண் கோடு, உள்ளகக்கோடு Recurrence relation மீள்வரு தொடர்பு Recurring Decimal மீள்வரு தசம பின்னம் Reflection எதிரொளிப்பு, எதிர்வம், பிரதிபலித்தல் Reflexicity எதிர்வு Reflexive relation எதிர்வு உறவு Regression Coefficient நிபந்தனை இணைவினை நிகழ்தகவு எண் Regular Polygon ஒழுங்குப் பலகோணம்
Relativity சார்பியல் Represent குறிகாட்டு
Requirement நிபந்தனை Research Paper ஆய்வுக்கட்டுரை Rhombohedron சாய்சதுரத்திண்மம் Rhomboid சாய்செவ்வகம் Rhombus சாய்சதுரம் Riemann Hypothesis ரீமான் கருதுகோள்
Rigour கண்டிப்பு Ring வளையம் Root sign மூலக்குறி Rotation சுழற்சி Row (of matrix) (அணியின்) நிரை, (அணியின்) வரிசை
Ruler மட்டக்கோல் SSatisfy (an equation) சரி செய்(தல்) Scalar அளவெண், திசையிலி
Self-adjoint matrix உடனிணைப்பு அணி
Sequence தொடர்முறை, தொடர்வு, தொடர்வரிசை Series சரம், தொடர்
Set கணம், (தொகுதி)
Several Complex Variables சிக்கல் பன்மாறிகள் Simultaneous Linear Equations நேரியல் ஒருங்கமைச் சமன்பாடுகள் Singleton ஓருறுப்புக்கணம் Skew Field பரிமாறாக்களம் Slope சரிவு, சாய்வு Solution தீர்வு Space வெளி
Span அளாவல் Special Case தனிக்குறிப்பு
Square (of a number) வர்க்கம் Square matrix சதுர அணி Stabilizer நிலையாக்கி Statics நிலை இயல் Step (of row-reduced echelon form) (குறுவரிசைப்படியின்) படி Step Function படிநிலைச் சார்பு Structure அமைப்பு Sub-group உட்குலம்
Substitution பதிலீடு Sum of Series தொடர் கூட்டுத்தொகை, சரக்கூட்டுத்தொகை Summability தொடர்கூட்டு வாய்ப்பு Summation of Series தொடர் கூட்டல், சரக்கூட்டல் Surjection முழுக்கோப்பு
Symbolism குறியீட்டமர்வு Symmetric Group சமச்சீர் குலம்
TTau-function டௌ சார்பு Tetrahedron நான்முகி
Tensor இழுவம் Theorem தேற்றம் Theory of Convergence ஒருங்குக்கோட்பாடு Thesis ஆய்வுக்கோட்பாடு Topological Equivalence இடவியற்சமானம்
Topology (Division of Mathematics) இடவியல்
Transcendental Number விஞ்சிய எண் Transfinite number வரைமீறு எண் Transitive relation கடப்பு உறவு
Translation பெயர்ச்சி
Transposition இடமாற்றல், (அணித்)திருப்பம்
Trigonometry முக்கோணவியல்
Trivial topology வெற்று இடவியற்கூறு
UUncertainty principle ஐயப்பாட்டுக்கொள்கை, அறுதிக்கொளாமைக்கொள்கை Uncountability எண்ணுறாமை
Union ஒன்றிப்பு Unit அலகு
Unitary அலகு நிலை
Universal Alagebra அனைத்தியற்கணிதம் Universe பேரண்டம் VVanish சுழி(த்தல்) Variable மாறி Vector திசையன்
WWalk (in a graph) (கோலத்தில்) நடை ZZenith உச்சி Zero (number) சூனியம்
Zeta function ஜீட்டா சார்பு இவற்றையும் பார்க்கவும் |
Portal di Ensiklopedia Dunia