கதனகுதூகலம்

கதனகுதூகலம் இருபத்தொன்பதாவது மேளகர்த்தா இராகமும், "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் ஐந்தாவது இராகமுமாகிய தீரசங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.[1][2]

இலக்கணம்

இந்த இராகத்தில் சட்சம் (ச), சதுச்ருதி ரிசபம் (ரி2), சுத்த மத்திமம் (ம1), சதுச்ருதி தைவதம் (த2), காகலி நிசாதம் (நி3), அந்தர காந்தாரம் (க3), பஞ்சமம் (ப) ஆகிய சுரங்கள் வருகின்றன. இதன் ஆரோகண அவரோகணங்கள் பின்வருமாறு:

ஆரோகணம்: ச ரி212 நி33 ப ச்
அவரோகணம்: ச் நி32 ப ம13 ரி2

இந்த இராகத்தில் எல்லாச் சுரங்களும் முழுமையாக அமைந்திருப்பதால் இது ஒரு சம்பூர்ண இராகம் ஆகும். இதன் ஆரோகணத்தில் 7 சுரங்களும் அவரோகணத்தில் 7 சுரங்களும் உள்ளன. இதனால் இதை "சம்பூரண" இராகம் என்பர். இதன் ஆரோகணத்தில் காந்தாரம், பஞ்சமம் ஆகியன ஒழுங்கு மாறி வருவதால் இது ஒரு இருசுர வக்கிர இராகம் ஆகும்.

மேற்கோள்கள்

  1. "The Journal of the Music Academy". The Music Academy, Madras Committee Meetings 62: 27. https://musicacademymadras.in/musicacademylibrary/admin/Music_Academy_Lib_DigLib/idocs/Vol.62_1991.pdf. 
  2. Sruti. P.N. Sundaresan. 1998. p. 44. Retrieved 27 May 2021.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya