கருங்காலக்குடி சமணர் படுகைகள்

கருங்காலக்குடி சமணர் படுகைகள், தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கருங்காலக்குடி குறுவட்டத்தில், கருங்காலக்குடி எனும் கிராமத்தில் உள்ளது.[1] கருங்காலக்குடி கிராமத்தின் பஞ்சபாண்டவர் குன்றுகளில் சமணத் துறவிகள் தங்கிய குகைக் குன்றுகளும், படுகைகளும், தீர்த்தங்கரரின் புடைப்புச் சிற்பமும், தமிழ் பிராமி கல்வெட்டுகளும் உள்ளது. தமிழ்நாட்டில் இங்குதான் முதன் முதலில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. கிமு மூன்றாம் நூற்றாண்டு முதல் கிபி 9-ஆம் நூற்றாண்டு வரையிலான தமிழ் கல்வெட்டுகள் இங்கு காணப்படுகிறது. சமணத் துறவிகள் இங்கு தங்கி கல்வி, மருத்துவப் பணிகள் செய்துள்ளனர்.[2] இதனை தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை பராமரிக்கிறது.

அமைவிடம்

கருங்காலக்குடி சமணர் படுகைகள், மதுரையிலிருந்து 46 கி.மீ. தொலைவிலும், மேலூருக்கு வடக்கே சிங்கம்புணரி செல்லும் வழியில் 16 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. மதுரை மேலூர் வருவாய் வட்டத்தின் பிர்காக்களும், வருவாய் கிராமங்களும்
  2. கருங்காலக்குடி தொல்பழங்காலக் குறியீடுகளும் சமணச் சின்னங்களும்
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya