இக் குறு உருவம் சித்தசீலத்தில் வாழும் பஞ்சபரமேட்டிகளைச் சித்தரிக்கிறது. பிராகிருத மொழி மூலத்தையும் இடையிட்ட குசராத்தி மொழி உரையையும் கொண்ட, சிறீசந்திரரால் எழுதப்பட்ட சங்கிரகணீரத்னத்தின் ஓலை நறுக்கு, 17ம் நூற்றாண்டு (பிரித்தானிய நூலகம்)பஞ்ச-பரமேட்டிகளை விளக்கும் புடைப்புச் சிற்பம் (புகைப்படம்: சிறீ மகாவீர்சி சமணக்கோயில்)
சமணத்தில் பஞ்ச-பரமேட்டிகள் (சமக்கிருதம்: पञ्च परमेष्ठी "ஐந்து உயருயிரிகள்") என்போர் வணங்கத்தக்க, ஐந்து அடுக்கு சமயத் தலைவர்களாவர்.[1][2]
மேலோட்டம்
ஐந்து உயருயிரிகளும் பின்வருவோராவர்:
அருகதர்: விழிப்புணர்வு பெற்ற, கேவல ஞானத்தை அடைந்த அனைத்து உயிர்களும் அருகதர்களாகக் கருதப்படுவர். 24 தீர்த்தங்கரர்கள் அல்லது சினர்கள் எனப்படும் தற்போதைய காலச்சுழற்சியில் சமண மதத்தை நிறுவியவர்களாகக் கருதப்படும் அனைவரும் அருகதர்களாவர். அனைத்துத் தீர்த்தங்கரர்களும் அருகதர்களாயினும், அனைத்து அருகதர்களும் தீர்த்தங்கரர்களல்ல.[2]
சித்தர் (அசிரி): பிறப்பு மற்றும் இறப்புச் சுழற்சியிலிருந்து விடுதலையடைந்த உயிர்கள்.
விடுதலையடைந்த உயிர்களின் (சித்தர்) வரையறை - வரி 51.[5]
முதன்மை நல்வழிப்படுத்துவோரின் (ஆச்சாரியர்) வரையறை - வரி 52.
நல்வழிப்படுத்துவோரின் (உபாத்தியாயர்) வரையறை - வரி 53.
துறவியின் (சாது) வரையறை - வரி 54.
“
ஐந்து உயரிய உயிர்களின் (பஞ்ச-பரமேட்டி) பண்புகளைப் போற்றியவாறு, முப்பத்தைந்து, பதினாறு, ஆறு, ஐந்து, நான்கு, இரண்டு மற்றும் ஓரெழுத்துக்களாலான புனித மந்திரங்களைத் தியானிக்குக, ஓதுக அல்லது உச்சரிக்குக. மேலும், ஆசிரியனின் (குரு) கற்பித்தலுக்கிணங்க ஏனைய மந்திரங்களைத் தியானிக்குக மற்றும் ஓதுக.[6]
”
அருகதர்
நான்கு கொடிய கர்மங்களை (காதிய கர்மங்கள்) ஒழித்த, முடிவில் நம்பிக்கை, மகிழ்ச்சி, அறிவு மற்றும் வலுப் பொருந்திய, மிகவும் நற்குறி பொருந்திய உடலில் வாழுகின்ற (பரமௌதாரிக சாரீர), தூய உயிரியான அவ் உலக ஆசிரியர் (அருகதர்) தியானிக்கத் தக்கவராவார்.