கங்காளி தொல்லியல் மேடு (Kankali Tila or Kankali mound or Jaini mound) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா மாவட்டத்தின் தலைமையிடமான மதுரா நகரத்தில் அமைந்த சமணத்தொல்லியல் மேடு ஆகும். செர்மானிய தொல்லியல் அறிஞர் அலோயிஸ் அன்டன் ஃபூரர் என்பவர் இவ்விடத்தில் 1890-1891களில் அகழாய்வு செய்த போது சமணச் சிற்பங்கள், தூண்கள் மற்றும் கல்வெட்டுக்களைக் கண்டெடுத்தார்.[3] கங்காளி தொல்லியல் மேடு 500 அடி உயரம், 350 அடி அகலத்தில் செவ்வக வடிவம் கொண்டிருந்தது.
[3]
கங்காளி தொல்லியல் மேட்டை அகழாய்வு செய்த போது கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி 12-ஆம் நூற்றாண்டு வரையிலான, சமணத்தில்திகம்பரர்-சுவேதாம்பரர் பிரிவுகள் உண்டாவதற்கு முந்தைய சமண சமயத்தின் அழகிய சிற்பங்கள், கல்வெட்டுக்கள், தூண்கள்,[4]சிலைகள், அயாகாபட்டா எனும் சமணக் கல் சிற்பப் பலகை போன்ற தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கங்காளி தொல்லியல் மேட்டில் கண்டிபிடிக்கப்பட்ட சமணத் தொல்லியல் பொருட்கள் மதுரா அரசு அருங்காடசியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.