கரு. அழ. குணசேகரன்
கே. ஏ. குணசேகரன் என அழைக்கப்படும் கரு. அழ. குணசேகரன் (12 மே 1955 - 17 சனவரி 2016) ஒரு தமிழ்நாட்டு எழுத்தாளர், நாட்டுப்புறவியல்-நாடகவியல்-தலித்தியல் அறிஞர், பாடகர், மற்றும் திரைக் கலைஞர் ஆவார். வாழ்வும்,கல்வியும்சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகேயுள்ள மாரந்தை சிற்றூரில் பிறந்தவர். இளையான்குடி உயர்நிலைப்பள்ளி, முனைவர் சாகிர் உசேன் கல்லூரி, சிவகங்கை அரசு கலைக்கல்லூரி, சிவகங்கை, தியாகராசர் கல்லூரி, மதுரை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் படித்தவர். பி.ஏ.(பொருளாதாரம்) எம்.ஏ(தமிழ் இலக்கியம்) முனைவர் பட்ட ஆய்வு(நாட்டுப்புற நடனப் பாடல்கள் குறித்து), 1978 இல் காந்தி கிராமம் நாடகப் பயிற்சிப் பட்டறைகளில் பேராசிரியர் சே. இராமானுஜத்திடம் நாடகப் பயிற்சி பெற்றார். பணிகள்நாடகத்தைப் பற்றியும், நாட்டுப்புறவியலைப் பற்றியும் ஆய்வு நூல்களையும், ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், பதினான்குக்கும் மேற்பட்ட படைப்பு நூல்களையும் எழுதியுள்ளார். சமஸ்கிருத அரங்கவியலுக்கு (theatre) மாற்றாக, தலித் அரங்கவியல் என்னும் கோட்பாட்டை உருவாக்கியுள்ளார். 'பலி ஆடுகள்' என்னும் முதல் தலித் நாடகத்தைப் படைத்துள்ளார். 'தன்னனானே' என்னும் கலைக்குழு வழியாகச் சமூக பிரச்சினைகளை மையமாகக் கொண்ட நாடகங்களை அரங்கேற்றி வந்தார். புதுச்சேரி சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்த்துக்கலைப் பள்ளியின் (நாடகத்துறை) தலைவராக இருந்தவர். எழுதிய நூல்கள்
உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். விருதுகள்
மறைவுநீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட குணசேகரன், உடல்நலக் குறைவால் புதுச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் 2016 சனவரி 17 ஞாயிற்றுக்கிழமை காலமானார். மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia