ம. இராசேந்திரன் (M. Rajendran) என அறியப்படும் மகாதேவன்இராசேந்திரன் (பிறப்பு - 3 மார்ச்சு 1951) தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பொறுப்பு வகித்தவர். இவர் தமிழ்ப் பேராசிரியரும் எழுத்தாளரும் கணையாழி இதழின் வெளியீட்டாளரும் ஆவார்.
இவர் கோயம்புத்தூரில் 2010 ஆம் ஆண்டில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க ஒருங்கிணைப்பாளராக வினையாற்றினார். 2022ஆம் ஆண்டு சனவரியில் அமைக்கப்பட்ட தமிழ்நாட்டு அரசின் பொதுநூலகச் சட்டம், விதிகள் திருத்த உயர்நிலைக் குழுவிற்குத் தலைவராக இருந்தார். தற்போது தமிழ் வளர்ச்சிக் கழகத் தலைவராக இருக்கிறார்.
ம. இராசேந்திரனுக்கு திருவாரூர் மாவட்டம்குடவாயில் சொந்த ஊர் ஆகும். தவிலிசைக் கலைஞர் மகாதேவனுக்கும் ஞானம்பாளுக்கும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த இடங்காண்கோட்டை கீழையூர்[2] என்னும் எடகீழையூர் ஊராட்சிக்கு உட்பட்ட இடங்காண்கோட்டை அன்னவாசல் என்னும் எட அன்னவாசல் என்னும் சிற்றூரில் இராசேந்திரன் பிறந்தார்.[3]
கல்வி
ம. இராசேந்திரன் பிறந்த ஓராண்டிற்குள்ளேயே அவர் தந்தை காலமாகிவிட்டார். அதனால் அவர் தன் தாய்மாமன் சு. நடேசன் ஆதரவில் பள்ளிப்படிப்பைத் தொடங்கினார்.
தொடக்கக்கல்வியை (1-5 வகுப்புகள்) எட அன்னவாசலில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பெற்றார்.
நடுநிலைக்கல்வியையும் (6-8 வகுப்புகள்) உயர்நிலைக்கல்வியையும் (9-11 வகுப்புகள்) எடமேலையூரில் இருந்த அரசு உயர்நிலைப்பள்ளியில் பெற்றார்.[4]
ஆய்வியல் நிறைஞர் (Master of Philosophy ) பட்டத்தை, சென்னையிலுள்ள பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியர் முனைவர் நா. செயப்பிரகாசம் வழிகாட்டலில் "ரா.சீ.யின் நாவல்கள் - ஓர் ஆய்வு" என்ற தலைப்பில் ஆய்வுசெய்து 1979ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[5]
முனைவர் (Doctorate) பட்டத்தை, சென்னைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் முனைவர் ந. சஞ்சீவி வழிகாட்டலில் காலின் மெக்கன்சி (1754-1821) சேகரித்த சுவடிகளைப்பற்றி "மெக்கன்சியின் தமிழ்ச் சுவடிகள்" [6] என்ற தலைப்பில் ஆய்வுசெய்து 1984ஆம் ஆண்டு பெற்றார்.[7]
பணி
இராசேந்திரன் தமிழ்நாடு அரசில் பின்வரும் பொறுப்புகளை வகித்தார்[8]:
மேலும் சென்னை கோடம்பக்கத்திலிருந்த காஞ்சி மணிமொழியார் தமிழ்க்கல்லூரி, சென்னை பவழக்காரத் தெருவிலிருந்த திருவள்ளுவர் தமிழ்க்கல்லூரி ஆகியவற்றில் மதிப்பூதியம் பெறாத தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார்.[18]
இடம்பெற்ற குழுக்கள்
இராசேந்திரனை தமிழ்நாடு அரசு பின்வரும் வல்லுநர் குழுக்களில் இடம்பெறச் செய்தது:
உறுப்பினர், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தெரிந்தெடுக்கும் குழு 2021 [19] ,[20]
உறுப்பினர், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தரைத் தெரிந்தெடுக்கும் குழு 2022 [21][22]
Editor, Journal of Tamil studies, 2006-2008, International Institute of Tamil Studies, Chennai.
குடும்பம்
ம. இராசேந்திரனுடன் உடன்பிறந்தவர்கள் இரு பெண்கள். இவர் மைதிலி என்பவரை மணந்துள்ளார். இவர்களுக்கு தென்றல், எழில் என்னும் இரு பெண்மக்களும் மேகனா, கெவின், தில்லானா என்னும் மூன்று பேரக்குழந்தைகளும் உள்ளனர்.
↑Alphabetical List of Villages in Taluks and Districts of the Madras Presidency; 1933; Re-printed by the Superintendent of Government Press, Madras; Page 586