கல்யாண் (நடன அமைப்பாளர்)
கல்யாண் என்பவர் ஓர் இந்திய நடன இயக்குநர் ஆவார். இவர் முதன்மையாக தமிழ், தெலுங்கு படங்களில் பணியாற்றுகிறார். மேலும் இந்தி, மலையாளம், கன்னட படங்களிலும் பணியாற்றியுள்ளார். . நடனக் கலைஞராகவும் நடிகராகவும் தனது வாழ்க்கையைத் தொடங்கிய பின்னர், பிரபல நடன இயக்குநராக இருநூறுக்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களுக்கு நடனங்களை அமைத்துள்ளார். பிரபல தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளான ஜோடி நம்பர் ஒன் மற்றும் விஜய் தொலைக்காட்சியின் கிங்ஸ் ஆஃப் டான்ஸ் ஆகியவற்றிலும் இவர் நடுவராக இருந்துள்ளார். தொழில்கல்யாண் தனது பெரிய அத்தை புலியூர் சரோஜாவுடன் இணைந்து நடனக் கலைஞராக திரைப்படத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பேர் சொல்லும் பிள்ளை (1987) திரைப்படத்தில் நடனக் கலைஞராக அறிமுகமான இவர், பின்னர் 1980 களின் பல பிரபலமான தமிழ் படங்களில் அவருடன் உதவி நடன இயக்குநராகப் பணியாற்றினார். கல்லூரி நாடகத் திரைப்படமான கல்லூரி வாசல் (1996) படத்தில் அஜித் குமார், பிரசாந்த், பூஜா பட் ஆகியோருக்கு எதிர்மறையாக நடித்தார். எஸ். ஏ. சந்திரசேகரின் மாண்புமிகு மாணவன் (1996) திரைப்படத்தில் நடிகர் விஜயின் பாத்திரத்துக்கு எதிரியாக நடித்தார், 1996 முதல் சின்னி பிரகாஷ், தாரா, தருண், புலியூர் சரோஜா போன்ற பல்வேறு நடனக் கலைஞர்களிடம் உதவியாளராகப் பணியாற்றினார். ஒரு முக்கிய நடன இயக்குநராக பணியாற்றிய முதல் தமிழ்த் திரைப்படம் உயிரோடு உயிராக (1999) ஆகும், மேலும் இவர் தீனா (2001) படத்தில் பணிபுரிந்ததைத் தொடர்ந்து தொழிலில் ஒரு முன்னேற்றத்தைக் கண்டார்.[1] மேலும் கல்யாண் கற்றது களவு (2010) கண்ணுல காச காட்டப்பா (2016) போன்ற படங்களில் நடித்ததுடன் இணை தயாரிப்பாளர்களாக இருந்தார்.[2][3] பிரபலமான ரியாலிட்டி தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளான ஜோடி நம்பர் ஒன் மற்றும் விஜய் டிவியின் கிங்ஸ் ஆஃப் டான்ஸ் ஆகியவற்றில் கல்யாண் நடுவராக இருந்துள்ளார். திரைப்படவியல்நடிகர்
நடனக்கலைஞராக
நடன இயக்குநர்
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
|
Portal di Ensiklopedia Dunia