காக்சிங்
காக்சிங் (Kakching), வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்புரி மாநிலத்தின் காக்சிங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும்.[2][3][4][5][6] இது கடல் மட்டத்திலிருந்து 776 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது மாநிலத் தலைநகரான இம்பால் நகரத்திற்கு தெற்கே 45 கிலோ மீட்டர் தொலைவிலும்; மியான்மர் நாட்டின் எல்லைக்கு மேற்கே 70 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. மக்கள் தொகை பரம்பல்2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 12 வார்டுகளும், 7,144 வீடுகளும் கொண்ட காக்சிங் நகரத்தின் மக்கள் தொகை 32,138 ஆகும். அதில் ஆண்கள் 15,710 மற்றும் பெண்கள் 16,428 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு பெண்கள் 1046 வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.01% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 83.08% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 98.61%, கிறித்தவர்கள் 0.87% மற்றும் பிறர் 0.53% ஆகவுள்ளனர்.[7]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia