மணிப்பூர் வன்முறைகள், 2023
2023 மணிப்பூர் வன்முறைகள் என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், இம்பால் பள்ளத்தாக்கில் வாழும் பெரும்பான்மையினரான மெய்தி மக்களுக்கும், சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் வாழும் குக்கி பழங்குடி மக்களுக்கும் இடையில் வெடித்த வன்முறை ஆகும். இந்த மோதலில் 4 சூலை வரை, வன்முறையில் 142 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.[4] 300 பேருக்கும் மேல் காயமுற்றுள்ளனர்.[5][6][7] தோராயமாக 54,488 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.[8] 14 ஏப்ரல் 2023 அன்று மெய்தெய் மக்கள் சங்கத்தின் ரிட் மனுவின் அடிப்படையில் மணிப்பூர் உயர் நீதிமன்றம், மெய்தி சமூகத்தை, பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்" என்று மணிப்பூர் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.[9] இந்த உத்தரவை எதிர்த்து மணிப்பூர் அனைத்து பழங்குடி மாணவர் சங்கம் (ATSUM) மணிப்பூரின் அனைத்து மலை மாவட்டங்களிலும் வெகுஜன பேரணிகளை ஏற்பாடு செய்தது. இந்த பேரணிகளில் ஒன்றில், ஆர்ப்பாட்டக்காரர்கள் பிஷ்னுபூர் மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு குழுவினருடன் மோதினர், அதைத் தொடர்ந்து வீடு எரிக்கபட்டது.[10][11] உதாரணமாக, தலைநகர் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் முக்கியமாக வசிக்கும் குக்கி மக்களின், பூர்வீக நில உரிமைகள் தொடர்பாக தற்போதைய மாநில அரசாங்கத்தால் இலக்கு வைக்கப்படுவதாகக் கருதப்படுகிறார்கள்.[12] குக்கி மக்களில் பெரும்பாலோர் கிறித்தவர்கள். அசாம் ரைப்பிள்ஸ் மற்றும் இந்திய ராணுவத்தினர் மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுப்பதற்காக நிலை நிறுத்தப்பட்டனர். [13] [14]மாநிலத்தில் இணைய சேவைகள் 5 நாட்களுக்கு இடைநிறுத்தப்பட்டது. மேலும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 144இன் கீழ் மக்கள் சட்டவிரோதமாகக் கூடுவதைத் தடை செய்யப்பட்டது. இந்திய துருப்புக்களுக்கு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு வழங்கப்பட்டது. 6 மே 2023 முதல் மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.[15] வழக்குமணிப்பூர் வன்முறை வழக்குகள் குறித்து விசாரித்த இந்திய உச்ச நீதிமன்றம் 7 ஆகஸ்டு 2023 அன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம், மறுவாழ்வு மற்றும் இழப்பீடு வழங்குவதை மேற்பார்வையிடுவதற்கு, உயர் நீதிமன்ற முன்னாள் பெண் நீதிபதிகள் 3 பேர் கொண்ட குழுவை அமைத்தது.[16] மணிப்பூர் கலவரம் குறித்து மாவட்ட வாரியாக காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் குழுக்கள் அமைத்து விசாரிக்கப்படும் என உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.[17]25 ஆகஸ்டு 2023 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக வழக்குகளை அசாம் மாநிலத்திற்கு மாற்றிட உத்தரவிட்டது.[18] பின்னணி20 ஏப்ரல் 2023 அன்று மணிப்பூர் உயர் நீதிமன்றம், மெய்தி சமூகத்தை, பட்டியல் பழங்குடியினர் (எஸ்டி) பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்" என்று மணிப்பூர் மாநில அரசுக்கு உத்தரவிட்டது.[19] மெய்தி மக்களுக்கு பழங்குடியினர் தகுதி வழங்கினால், மலைப்பகுதிகளில் மெய்தி மக்கள் நிலங்களை வாங்கிக் குவிப்பர் என குகி மக்கள் பயந்தனர். இம்பால் பள்ளத்தாக்கில் இந்து சமயம் சார்ந்த மெய்திகள் 53% மக்கள் தொகையைக் கொண்டது. மேலும் மெய்தி மக்கள் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் குடியேறுவது தடைசெய்யப்பட்டுள்ளது. ஆனால் குக்கி பழங்குடியின மக்கள் பள்ளத்தாக்கு பகுதியில் குடியேறுவதற்கு தடை விதிக்கப்படவில்லை. மணிப்பூர் மாநிலத்தின் 3.5 மில்லியன் மக்களில் சுமார் 40% உள்ள குக்கிகள் மற்றும் நாகாக்கள் அடங்கிய பழங்குடி மக்கள் ஆவார். இம்மக்கள் பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதிகளில் வசிக்கின்றனர். கண்ணோட்டம்மணிப்பூர் முதல்வர் ந. பீரேன் சிங், ஏப்ரல் 28 அன்று சுராசந்த்பூருக்குச் சென்று திறந்தவெளி உடற்பயிற்சி கூடத்தைத் திறந்து வைக்கத் திட்டமிட்டிருந்தார். திறப்பு விழா நடைபெறுவதற்கு முன்னர் ஏப்ரல் 27 அன்று குக்கி பழங்குடியின போராட்டக்காரர்களால் உடற்பயிற்சி கூடத்திற்கு தீ வைக்கப்பட்டது. மணிப்பூரில் பழங்குடியினர் அல்லாத மெய்தி மக்கள் ஆதிக்கம் செலுத்தும் மேற்கு இம்பால் மாவட்டம், காக்சிங் மாவட்டம், தவுபல் மாவட்டம், ஜிரிபாம் மாவட்டம் மற்றும் ஜிரிபாம் மாவட்டம், பிஷ்ணுபூர் மாவட்டம் மற்றும் குகி பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் சுராசாந்துபூர் மாவட்டம், காங்போக்பி மாவட்டம் மற்றும் தேங்க்னௌபால் மாவட்டங்கள் உட்பட எட்டு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. மணிப்பூர் உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து அனைத்து பழங்குடி மாணவர் சங்கமான மணிப்பூர் (ATSUM) என்ற குக்கி அமைப்பு, "பழங்குடியினர் ஒற்றுமை அணிவகுப்பு" 3 மே 2023 அன்று பேரணிக்கு அழைப்பு விடுத்ததது. அது வன்முறையாக மாறியது. சுராசந்த்பூர் மாவட்டத்தில் குக்கி மாணவர் அமைப்பினர் தீ வைப்பதில் ஈடுபடத் தொடங்கினர் மற்றும் உள்ளூர் மெய்தெய் மக்கள் மீது தாக்குதல்கள் தொடுத்தனர். இந்த குக்கு மாணவர் அணிவகுப்பில் 60,000க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டதாக கூறப்படுகிறது. வன்முறையின் போது பழங்குடியினர் அல்லாத பகுதிகளில் பெரும்பாலும் கிறிஸ்தவ பழங்குடியினரின் குடியிருப்பு மற்றும் தேவாலயங்கள் தாக்கப்பட்டன. காவல்துறையின் கூற்றுப்படி, இம்பாலில் பழங்குடியின மக்களின் பல வீடுகள் தாக்கப்பட்டன. மேலும் 500 குடியிருப்பாளர்கள் இடம்பெயர்ந்து லாம்பேல்பட்டில் தஞ்சம் புகுந்தனர். வன்முறையால் பாதிக்கப்பட்ட சுமார் 1000 மெய்திகளும் இப்பகுதியை விட்டு வெளியேறி விஷ்ணுபூரில் தஞ்சம் புகுந்தனர். காங்போக்பி நகரில் இருபது வீடுகள் எரிக்கப்பட்டன.சுராசந்த்பூர், காக்சிங், காஞ்சிப்பூர், சோய்பம் லைகாய், தேனுகோபால், லாங்கோல், காங்போக்பி மற்றும் மோரே ஆகிய இடங்களில் வன்முறைகள் வெடித்தது. அதே சமயம் இம்பால் பள்ளத்தாக்கிலும் வன்முறைகள் அதிகரித்தது. இதனால் பல வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பிற சொத்துக்கள் எரிக்கப்பட்டு அழிக்கப்பட்டன. கலவரக்காரர்களை கட்டுப்படுத்த காவல் படை பல சுற்று கண்ணீர் புகை குண்டுகளை வீச வேண்டியிருந்தது. மே 3 அன்று அசாம் ரைப்பிள்ஸ் படையினர் மற்றும் இந்திய இராணுவத்தின் 55 பத்திகள் இப்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டன, மேலும் மே 4ஆம் தேதிக்குள் 9000க்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். மே 5இல் சுமார் 20,000 பேர் இராணுவப் பாதுகாப்பின் கீழ் முகாம்களுக்கு வெளியேற்றப்பட்டனர். இந்திய அரசின் 5 துணைநிலை இராணுவப்படைகளை இப்பகுதிக்கு விமானங்கள் மூலம் அனுப்பியது. எதிர்வினைகள்மணிப்பூர் முதல்வர் ந. பீரேன் சிங் "இரண்டு சமூகங்களுக்கிடையில் நிலவும் தவறான புரிதலால்" கலவரங்கள் தூண்டப்பட்டதாக குறிப்பிட்டு, இயல்புநிலையை மீட்டெடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.[20] இந்திய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2023 கர்நாடகா தேர்தலுக்கான தனது பிரச்சார நிகழ்ச்சிகளை இரத்து செய்தார். மணிப்பூரில் கலவர நிலவரம் குறித்து முதல்வர் பிரேன் சிங்குடன் தொலைபேசியில் பேசினார். வன்முறைகளின் போது காவல் துறை மற்றும் துணை இராணுவப்படைகளின் ஆயுதக் கிடங்கிலிருந்து காணாமல் போன 800 துப்பாக்கிகள் மற்றும் 11,000 துப்பாக்கி குண்டுகள் கலவரக்காரர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது.[21]மிசோரம் மாநிலத்தில் வாழும் நூற்றுக்கணக்கான மெய்தி மக்கள் மணிப்பூர் மற்றும் அசாம் நோக்கி புலம்பெயர்ந்து வருகின்றனர்.[22] வெளி இணைப்புகள்மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia