மகாவீர் பிரசாத்
மகாவீர் பிரசாத் (Hindi: महावीर प्रसाद; ஆங்கிலம்:Mahaveer Prasad)(11 நவம்பர் 1939 - 28 நவம்பர் 2010) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2004ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு சார்பில் பான்ஸ்கான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் மத்திய சிறுதொழில் மற்றும் வேளாண் மற்றும் கிராமப்புற தொழில்துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.[1] அரசியல்பிரசாத் 1974 முதல் 1977 வரை உத்தரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 1980ல் 7வது மக்களவைக்கும், 1984ல் 8வது மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பிப்ரவரி 1988 முதல் சூலை 1989 வரை மத்திய ரயில்வே துணை அமைச்சராகவும், சூலை 1989 முதல் திசம்பர் 1989 வரை சுரங்கத் துறையில் சுரங்கம் மற்றும் எஃகுத் துறை அமைச்சராகவும் இருந்தார். இவர் 1989இல் 9வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2004-ல் 14வது மக்களவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரசாத், 22 மே 2004[1] முதல் சிறுதொழில் மற்றும் விவசாயம் மற்றும் கிராமப்புற தொழில்கள் மத்திய அமைச்சராகப் பணியாற்றினார். ஆளுநராகசூன் 14 1994 முதல் 1999 வரை அரியானா ஆளுநராக பணியாற்றினார். மேலும் 18 செப்டம்பர் 1995 முதல் 16 நவம்பர் 1995 வரையிலும், மீண்டும் 23 ஏப்ரல் 1996 முதல் 26 ஜூலை 1997 வரையிலும் இமாச்சலப் பிரதேசத்தின் ஆளுநராகப் பணியாற்றினார். இறப்புமகாவீர் பிரசாத் 28 நவம்பர் 2010 அன்று தில்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் நீண்ட கால நோய்க்குப் பிறகு இறந்தார்.[2] மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia