கிருஷ்ண குமார்
கிருஷ்ண குமார் (Krishna Kumar, பிறப்பு: சூன் 12, 1968) என்பவர் கேரளாவைச் சேர்ந்த இந்திய நடிகரும் அரசியல்வாதியும் ஆவார். இவர் தமிழ், மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் ஒருமுறை இந்திய இராணுவத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார், பின்னர் இவர் தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராக ஆனார். தற்போது கேரளாவைச் சேர்ந்த பாஜக தேசிய மன்ற உறுப்பினராக உள்ளார். வாழ்க்கைகிருஷ்ண குமார் திருவனந்தபுரத்தில் கோபாலகிருஷ்ணன் நாயருக்கும் ரெத்னம்மாவுக்கும் பிறந்த இரண்டு மகன்களில் இளைய மகனாக பிறந்தார். இவரது குடும்ப உறுப்பினர்கள் இந்திய இராணுவத்தில் பணியாற்றிய பின்னணியைக் கொண்டிருந்தனர், குமாரும் இராணுவத்தில் சேரத் தயாராகிக்கொண்டிருந்தார், அப்போதுதான் தூர்தர்ஷனில் செய்தி தொகுப்பாளராக பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். தூர்தர்ஷனில் பணிபுரியும் மூத்த அதிகாரியான அவரது பக்கத்து வீட்டுக்காரர் தான், இவருக்கு முகம் இருப்பதைக் கண்டறிந்து, அரசாங்கத்துக்குச் சொந்தமான ஒளிபரப்பு நிறுவனத்தில் இவருக்கு வேலை வழங்க முன்வந்தார், குமார் அதை ஏற்று ஊடகத் தொழிலுக்குச் செல்ல முடிவு செய்தார்.[1] தொழில்முதல் ஊடக வாய்ப்பைப் பெற்றபோது தூர்தர்ஷனில் தொலைக்காட்சி செய்தி தொகுப்பாளராக பணிபுரிந்தார். இவரைப் பார்த்த கைலாசம் பாலச்சந்தரின் மகன், தூர்தர்ஷன் மலையாளத்திற்காகத் தயாரிக்கப்பட்ட 13 அதியங்களை கொண்ட தொலைக்காட்சித் தொடரில் நடிக்க வாய்ப்பளித்தார். நடிகர் நெடுமுடி வேணுவின் மகன் பாத்திரத்தில் அறிமுகமானார். அந்த நேரத்தில் தூர்தர்ஷன் மலையாளம் மட்டுமே மலையாள மொழி தொலைக்காட்சியாக இருந்தது. பிறகு ஏசியாநெட் அறிமுகமானபோது, முதலில் சித்திக் மற்றும் வினயா பிரசாத் நடித்த ஸ்த்ரீ (1998-2000) என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை உருவாக்கினர், கிருஷ்ண குமார் சார்லட்டன் என்ற ஒரு பாத்திரத்தில் நடித்தார். சித்திக் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறியபோது, கிருஷ்ண குமார் புதிய கதாநாயகனாக மாற்றப்பட்டார், அந்நிகழ்ச்சி ஒரு பெரிய வெற்றியைப் பெற்றது.[2] 1993 ஆம் ஆண்டு ஜோஷி இயக்கிய சயின்யம் திரைப்படத்தில் அறிமுகமானார், அதில் அவர் கடற்படை அதிகாரியாக நடிக்கவிருந்தார், ஆனால் அக்காட்சிகள் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது, இவரை ஜோஷி ஏமாற்றவில்லை, இவருக்கு விக்ரமுக்கு ஒலிச்சேர்க்கை செய்ய கொடுத்தார். ஒலிச்சேர்க்கை கலைஞர்களின் சங்கத்திலிருந்து ஒலிச்சேர்க்கை கலைஞர்களுக்கான அட்டை இல்லை என்று கூறி இவர் ஒலிச்சேர்க்கை நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.[3] பின்னர் 1994 ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படமான காசுமீரம் மூலம் மீண்டும் அறிமுகமானார். இதன் பிறகு பல மலையாளத் திரைப்படங்களிலும் தொடர்களிலும் நடித்தார். பின்னர் சில தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்க துவங்கினார், பில்லா 2, தெய்வத்திருமகள், முகமூடி போன்ற தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[4][5] அரசியல்கிருஷ்ண குமார் பிப்ரவரி 2021 இல் அதிகாரப்பூர்வமாக பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார் [6] 2021 கேரள சட்டப் பேரவைத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக நின்றார்.[7] அக்டோபர் 5, 2021 அன்று, இவர் கேரள பாஜக தேசிய மன்றத்தில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனிப்பட்ட வாழ்க்கைகிருஷ்ண குமார் தூர்தர்ஷனில் செய்தி தொகுப்பாளராக இருந்தபோது, சிந்து என்ற பெண்ணை 12 திசம்பர் 1994 அன்று திருவனந்தபுரத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அகானா கிருஷ்ணா, இசானி கிருஷ்ணா, தியா கிருஷ்ணா, அன்சிகா கிருஷ்ணா உட்பட நான்கு மகள்கள் உள்ளனர். சிந்து விளம்பர நிறுவனத்தை நடத்தி வருகிறார்.[8][9][10] நடித்த திரைப்படங்கள்மலையாளத் திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்படங்கள்
தொலைக்காட்சித் தொடர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia