குஞ்சா நரசிம்ம சுவாமி கோயில், திருமாக்கூடல் நரசிபுரம்
குஞ்சா நரசிம்ம சுவாமி கோயில் (Gunja Narasima Swamy Temple) இந்தியாவின் கர்நாடக மாநிலமான மைசூர் மாவட்டத்தில் உள்ள திருமாக்கூடல் நரசிபுரம் எனும் ஊரில் அமைந்த இந்து கோவிலாகும். இந்த நகரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மைசூர் நகரிலிருந்து 20 மைல் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இந்த கோயில் விஜயநகர சாம்ராஜ்யத்தின் 16 ஆவது ஆட்சிக்கு முந்தையது எனக் கருதப்படுகிறது. இது வழக்கமான திராவிட பாணியில் நுழைவாயிலின் (மகாத்துவாரம்) மேல் ஒரு பெரிய கோபுரம் உள்ளது. இங்குள்ள கருவறைக்கு முன்னால் நான்கு தூண்கள் கொண்ட மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. காவேரி நதி மற்றும் கபினி நதியின் சங்கமத்தில் அமைந்துள்ள இந்த கோயில் இந்துக்களால் புனிதமாக கருதப்படுகிறது. பிரதான நுழைவாயிலின் முன்புறத்தில் வளரும் குன்றிமணி (கன்னடத்தில் குலகன்ஜி என அழைக்கப்படுகிறது) மரம் (அப்ரஸ் ப்ரிகேட்டோரியஸ்) என்பதிலிருந்து இந்த கோயிலுக்கு குஞ்சா நரசிம்ம சுவாமி கோயில் என்ற பெயர் வந்தது; இங்குள்ள குன்றிமணி மரத்தின் காலத்தை கணக்கிட்டு, இந்த கோயில் வாரணாசியை (காசி) விட புனிதமானது என்று பெருமையாக உள்ளூர்வாசிகள் கூறுகின்றனர். கோயிலில் உள்ள சிற்பங்களில் இந்து கடவுளான நரசிம்மர், குன்றுமணி மரத்தின் குச்சியையும், மறுகையில், ஒரு தண்டத்தையும் வைத்திருக்கிறார். அரக்கனான இரணியகசிபுவின் சிற்பமும் இங்கு உள்ளது. [1] பிரித்தானிய அரசு கால வரலாற்றாசிரியரும், கல்வெட்டுக் கலைஞருமான பி. லூயிஸ் ரைஸின் கூற்றுப்படி, இந்த கோயில் மைசூரின் தலாவோயின் (நிலப்பிரபுத்துவ பிரபு) ஆதரவில் ஆண்டு பராமரிப்புடன் இருந்தது. இந்த நேரத்தில் கோயில் பழுதுபார்ப்பு மற்றும் அலங்காரங்களுக்கு உட்பட்டதாக பதிவுகள் குறிப்பிடுகின்றன. [2] இந்த கோயில் இந்திய தொல்பொருள் ஆய்வின் கர்நாடக மாநில பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும். [3] இக்கோயிலுக்கு அருகில், அகஸ்தியஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படும் மற்றொரு கோயிலும் உள்ளது. இந்த இரு கோயில்களும் ஆண்டுதோறும் ஏராளமான பக்தர்களை ஈர்க்கும் ஒரு புனிதயாத்திரைத் தலமாக உள்ளது. [4] [1] படத்தொகுப்பு
இதனையும் காண்ககுறிப்புகள்
வெளி இணைப்புகள்![]() விக்கிமீடியா பொதுவகத்தில்,
குஞ்சா நரசிம்ம சுவாமி கோயில், திருமக்குடல் நரசிபுரம் என்பதில் ஊடகங்கள் உள்ளன. |
Portal di Ensiklopedia Dunia