குண்டுபள்ளி பௌத்த நினைவுச் சின்னங்கள்குண்டுபள்ளி பௌத்த நினைவுச் சின்னங்கள் (Guntupalli Group of Buddhist Monuments), இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத மாநிலத்தின், மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள குண்டுபள்ளி கிராமத்தில் உள்லது. மேற்கு கோதாவரி மாவட்டத் தலைமையிடமான ஏலூரு நகரத்திலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ளது.[1] இப்பௌத்த தொல்லியல் களம் இரண்டு பௌத்தக் குடைவரைகளும், ஒரு சைத்தியம் [2] மற்றும் இரண்டு பெரிய தூபிகளும் கொண்டது. [3] இப்பௌத்த தொல்லியல் களம் கிமு 200 - 0 ஆண்டுகளுக்கு முந்தியதாகும். பிற்காலத்தில் இத்தொல்லியல் களத்தில் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இத்தொல்லியல் களத்தை அகழ்வராய்ச்சி செய்த போது மூன்று பௌத்த நினைவுச் சின்னஙகள் கொண்ட பேழை கண்டெடுக்கப்பட்டது.[3] இப்பேழைகளில் தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் இருந்தது. ஒரு பேழையில் அவலோகிதரின் வெண்கலச் சிலை இருந்தது. பேழையின் மீது தேவநாகரி எழுத்தில் குறிப்புகள் கொண்டிருந்தது. இவைகள் கிபி 9 - 10ம் நூற்றாண்டுக் காலத்தவை என குறிப்புகள் மூலம் அறியப்படுகிறது.[3]
இதனையும் காண்கஅடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia