சியோத் குகைகள் (Siyot caves), இதனை கதேஷ்வரர் பௌத்த குகைகள் என்றும் அழைப்பர்.[1] இவைகள் ஐந்து பௌத்தகுடைவரைக் குகைளின் தொகுதியாகும். இக்குகைகள் குசராத்து மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தின், லக்பத் தாலுக்காவின் சியோத் கிராமத்தில் உள்ளது.[2]
இதன் முதன்மைக் குகையில் கிபி முதல் அல்லது இரண்டாம் நூற்றாண்டின் சிவன் சன்னதி அமைந்துள்ளது.[1]
பின்னர் இக்குடைவரை குகைகளை பௌத்த பிக்குகள் பயன்படுத்தினர். இக்குகையில் பிராமி எழுத்துகளால் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளது. பிற நான்கு குகைகள் ஒற்றை அறைகளுடன் உள்ளது.
சியோத் கிராமத்தில் 1988-1989ல் நடைபெற்ற தொல்லியல்அகழாய்வில், கௌதம புத்தர் உருவம் பொறித்த களிமண் சிலைகளும், பிராமி மற்றும் தேவநாகரி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுக் குறிப்புகளும் கிடைத்துள்ளது. மேலும் செப்பு மோதிரங்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட நந்தி உருவங்கள், மணிகள், சங்கிலிகள், நாணயங்கள், மட்பாண்டங்கள் கிடைத்துள்ளது.
அகழ்வாய்வின் படி, இப்பகுதியை சைவர்களிடமிருந்து பௌத்தர்கள் கைப்பற்றிய பின்னர், மீண்டும் 12 அல்லது 13ம் நூற்றாண்டில் மீண்டும் சைவர்களால் இக்குகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.[1][12]
மிகவும் தொன்மையான படிகளுடன் கூடிய கிணறு இக்குகைகளின் அருகே உள்ளது.[5]
↑"Siyot Caves". Gujarat Tourism. Archived from the original on 16 ஆகஸ்ட் 2015. Retrieved 1 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)